Asianet News TamilAsianet News Tamil

ஆன்டி என்று கூப்பிட்டதால் ஆத்திரம்! ஏடிஎம் காவலாளிக்கு செருப்படி கொடுத்த பெங்களூரு பெண்!

ஏடிஎம் காவலாளிக்கு பலத்த அடிகள் பட்டும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பெங்களூரு பெண் ஒருவரை உடல் ரீதியாக தாக்கியதற்காக சிக்கலில் சிக்கியது இது முதல் சம்பவம் அல்ல.

Bengaluru woman hits ATM security guard with slipper for calling her aunty sgb
Author
First Published Sep 28, 2023, 8:45 AM IST

பெங்களூரு பெண் ஒருவர் தன்னை "ஆன்டி" என்று குறிப்பிட்டதால் ஏடிஎம் காவலாளியை செருப்பால் அடித்தது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவம் செப்டம்பர் 19 அன்று நடந்துள்ளது.

அஸ்வினி என்று பெண், ஏடிஎம் மையத்தில் உள்ள இயந்திரத்திலிருந்து பணத்தை எடுத்துவிட்டு கதவின் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது கிருஷ்ணய்யா என்ற ஏடிஎம் காவலாளர் மற்றவர்களுக்கு வழிவிட்டு விலகுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறார்.

அவர் அந்தப் பெண்ணை ஒதுங்கச் சொல்லிக் கேட்கும்போது, "ஆன்டி" என்று குறிப்பிட்டிருக்கிறார். இதனால் கோபமடைந்த அந்தப் பெண் காவலாளியை தனது செருப்பைக் கழற்றி தாக்கத் தொடங்கிவிட்டார். உடல் ரீதியாக தாக்கியது மட்டுமின்றி, அவரை கெட்ட வார்த்தைகளால் திட்டியதாகவும் அப்பகுதியில் இருந்து சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.

ஏடிஎம்மில் இருந்த மற்ற வாடிக்கையாளர்கள் இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பாதிக்கப்பட்ட கிருஷ்ணய்யாவும் அஸ்வினி மீது மல்லேஸ்வரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பேரில் அஸ்வினி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஏடிஎம் காவலாளிக்கு பலத்த அடிகள் பட்டும் காயம் ஏதும் ஏற்படவில்லை. பெங்களூரு பெண் ஒருவரை உடல் ரீதியாக தாக்கியதற்காக சிக்கலில் சிக்கியது இது முதல் சம்பவம் அல்ல.

ஜூலை மாதம், ஒரு பெண் தன் காதலனுடன் வாக்குவாதம் செய்துகொண்டிருந்தபோது திடீரென கத்தியால் குத்தினார். பின்னர் கைது செய்யப்பட்டார். இருவரும் பணச்சிக்கல் தொடர்பாக பல மாதங்களாக சண்டையிட்டுக் கொண்டிருந்ததாகவும், அந்த நபர் வேறொரு பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாவும் போலீசார் விசாரணையில் தெரிந்தது.

Follow Us:
Download App:
  • android
  • ios