சண்டை போட்ட நபரை காரின் முன்பக்கத்தில் 1 கிமீ தூரம்.. தரதரவென இழுத்து சென்ற பெண்! வைரல் CCTV வீடியோ!
ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு நபர் ஒருவர் காரின் பானெட்டில் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆண் ஒருவர் காரின் முன்பக்கத்தில் இழுத்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பெங்களூர், ஞானபாரதி மெயின் ரோட்டில் தர்ஷனின் காருக்கும், பிரியங்கா சென்ற வாகனத்துக்கும் இடையே விபத்து ஏற்பட்டது. தர்ஷனின் கார் மீது பிரியங்காவின் கார் மோதியதாகக் கூறப்பட்டதால், அவர் வாகனத்தில் இருந்து வெளியே வந்தார்.
தர்ஷன் காரை நிறுத்தி அதில் இருந்தவர்களிடம் பேச முயன்றபோது, பிரியங்கா அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றதாக கூறப்படுகிறது. ஓடிவிடலாம் என்ற பயத்தில் தர்ஷன் வேகமாக குதித்து காரின் பானெட்டில் ஏறினார் என்று கூறப்படுகிறது.
ஒரு கிலோமீட்டர் தூரம் காரில் வேகமாக அந்த இளைஞர் இழுத்து செல்லும் காட்சி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. காரை ஓட்டிச்சென்ற அந்த பெண், அவரது கணவர் மற்றும் மேலும் ஒருவர் மீது கொலை முயற்சி மற்றும் சதி முயற்சி ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க..வாரிசு, துணிவு வசூலை அசால்ட்டாக தட்டி தூக்கிய டாஸ்மாக் !! பொங்கல் பண்டிகை மது விற்பனை இவ்வளவா.!
குற்றம் சாட்டப்பட்ட பெண்ணின் கணவர் பிரமோத், தர்ஷன் மற்றும் அவரது மூன்று நண்பர்கள் மீது குற்றம் சாட்டி, அவரை அடித்ததாகவும், அவரது மனைவியைத் துன்புறுத்தியதாகவும் குற்றம் சாட்டினார். இது தொடர்பாக 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதன் சிசிடிவி காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதையும் படிங்க..தமாகாவிடம் இருந்து தொகுதியை நைசாக தூக்கிய எடப்பாடி.. ஈரோடு கிழக்கில் இரட்டை இலை? Vs தாமரை? பாவம் ஓபிஎஸ்!