பெங்களூருவில் உள்ள ஒரு PG விடுதியில் ஆன்லைன் பணம் செலுத்தினால் 12% GST சேர்க்கப்படும் என்ற அறிவிப்பு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பலரும் இதை வரி ஏய்ப்பு முயற்சி என விமர்சித்து, சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

பெங்களூருவில் உள்ள ஒரு ‘பெயிங் கெஸ்ட்’ (PG) விடுதியில் ஒட்டப்பட்டிருந்த தற்போது இணையத்தில் வைரலாகி, நெட்டிசன்கள் கோபத்தையும் அதிருப்தியையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.

ஒரு ரெட்டிட் பயனர் பகிர்ந்த புகைப்படத்தில், அந்த விடுதியில் வாடகை “பணமாக மட்டுமே” செலுத்த வேண்டும் எனவும், ஆன்லைன் மூலம் பணம் செலுத்தினால் 12% GST சேர்க்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதை பார்த்த பலரும் இதை வரி ஏய்ப்பு முயற்சி என விமர்சிக்கிறார்கள்.

அறிவிப்பு இணையத்தில் பரவியது, பலர் அந்த ரெட்டிட் பயனருக்கு சட்ட நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர். சிலர் “இத்தகைய அலட்சியமான சட்ட மீறல்களுக்கு கடுமையான நடவடிக்கை தேவை” எனக் கூறினர். இந்த அறிவிப்பின் நம்பகத்தன்மை இன்னும் உறுதி செய்யப்படவில்லை என்றாலும், சமூக ஊடகங்களில் விவாதம் சூடுபிடித்துள்ளது.

“ஆன்லைனில் செலுத்தினால் கூடுதல் செலவு வரும். அதனால் பணமாக வாங்குகிறார்கள். இது நேரடி வரி வசூல் தான்,” என ஒருவரும், “நாம் UPI-யில் மட்டுமே செலுத்த வேண்டும். வேண்டும். பில் தருமாறு கேட்போம். பில் தர முடியாது என்பதே இவர்களின் நிலை” என மற்றொருவரும் கருத்து பதிவு செய்துள்ளார்.