தேர்வு நடைபெறும் நேரத்தில் பார்ட்டிக்கு போக வேண்டாம் என்று கூறியதை அடுத்து, இளம் பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

பெங்களூர், கெம்பேகவுடா நகர் நஞ்சப்பா லே அவுட்டைச் சேர்ந்தவர் சந்திரசேகர். இவருக்கு சந்திரிகா என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு அர்பிதா (17) என்ற மகள் உள்ளார். இவர் ப்ளஸ் 2, படித்து வந்தார் அர்பிதா.

தற்போது பொதுத்தேர்வு நடைபெற்று வரும் நிலையில், அர்பிதா தனது தோழியின் பிறந்தநாளையொட்டி நடைபெறும் பார்ட்டிக்கு செல்ல வேண்டும் என்று தாய் சந்திரிகாவிடம் கேட்டுள்ளார்.

பொது தேர்வு நடந்து வருவதால், பார்ட்டிக்கு போக வேண்டாம் என்றும், படிப்பும் மட்டும் கவனம் செலுத்து என்று அர்பிதாவிடம் சந்திரிகா கூறியுள்ளார். 

ஆனால், அர்பிதாவோ பார்ட்டிக்கு போவேன் என்று அடம்பிடித்துள்ளார். பார்ட்டிக்கு போகக் கூடாது என்று சந்திரிகாவும் கடுமையாக கூறியுள்ளார். இதனால், கோபமடைந்த அர்பிதா, தனது அறைக்குள் சென்று கதவைப் பூட்டுக் கொண்டார்.

மதியம் சென்ற அர்பிதா, இரவு 7 மணி ஆகியும் வெளியே வரவில்லை. மகள் வராததை அடுத்து, சந்திரிகா, கதவை தட்டிப்பார்த்துள்ளார். ஆனால், எந்தவித பதிலும் வரவில்லை. 

பயந்துபோன சந்திரிகா, கணவருக்கு போன் செய்து அழைத்துள்ளார்.  அவசர அவசரமாக வந்த சந்திரசேகரும், வீட்டுக்குள் சென்று அறையின் கதவை உடைத்து சென்று பார்ததபோது, அட்ரபிதா தூக்கில் தொங்கிய நிலையில் இருந்துள்ளார்.

மகள் தூக்கில் தொங்குவதைப் பார்த்த அவர்கள் இருவரும் அலறி அடித்துக் கொண்டு, அர்பிதாவை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அர்பிதாவை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். 

தேர்வு நடைபெறும் நேரத்தில் பார்ட்டிக்கு போக வேண்டாம் என்று கூறியதற்காக இளம் பெண் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.