இந்தியாவின் முக்கிய நகரங்களில் ஒன்றாக திகழும் ஒரு காஸ்மோபாலிடன் நகரம் தான் பெங்களூரூ. இந்நிலையில் அண்மையில் வெளியான ஒரு ஆய்வின்படி பெங்களூரு நகரத்தில் மொத்தம் 60 முழுமையாகச் செயல்படும் மேம்பாலங்கள் இருந்தபோதிலும், அங்கு போக்குவரத்துச் சிக்கல்களால் சாலைப் பயன்பாட்டுக்காக சுமார் 19,725 கோடி இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது. 

போக்குவரத்து தாமதம், அதனால் ஏற்படும் நெரிசல், சிக்னல்கள் நிறுத்தம் போன்ற பல பிரச்சனைகளால் எரிபொருள் இழப்பு மற்றும் அது தொடர்புடைய காரணிகளால் பெங்களூரு ஆண்டுக்கு 19,725 கோடி இழப்பை சந்திக்கிறது என்று பிரபல போக்குவரத்து மற்றும் இயக்கவியல் நிபுணர் எம்.என்.ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் மதிப்பிட்டுள்ளனர்.

பல மாநில அரசுகளுக்கும் மற்றும் அதன் போக்குவரத்துக்கான ஸ்மார்ட் சிட்டிகளின் ஆலோசகராகவும் உள்ள ஸ்ரீஹரி தற்போது, கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமாரிடம் போக்குவரத்து மேலாண்மை, சாலைத் திட்டமிடல், மேம்பாலங்கள் உள்ளிட்டவற்றின் பரிந்துரைகள் அடங்கிய அறிக்கையை சமர்ப்பித்தார் என்று கூறப்படுகிறது.

நகரத்தில் முழுமையாக செயல்படும் 60 மேம்பாலங்கள் இருந்தபோதிலும், தாமதம், கூட்ட நெரிசல், சிக்னல்களில் நிறுத்தம், வேகமாக நகரும் வாகனங்களின் குறுக்கீடு, எரிபொருள் இழப்பு, பயணிகளின் நேரம் போன்ற காரணங்களால் ஐடி ஹப் சாலைப் பயனாளர்களுக்கு 19,725 கோடி இழப்பு ஏற்படுவதாக ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் கண்டறிந்துள்ளனர். 

இஸ்ரோ முதல் கோவிட்-19 வரை! சுதந்திர இந்தியாவின் வியக்க வைக்கும் அறிவியல் தொழில்நுட்ப சாதனைகள்

மேலும் வெளியான அறிக்கையின்படி, தகவல் தொழில்நுட்பத் துறையில் வேலைவாய்ப்பின் அதிகரிப்பு காரணமாக அது தொடர்புடைய வீட்டுவசதி, கல்வி போன்ற அனைத்து துறைகளிலும் பெங்களூருவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக மக்கள் தொகை 14.5 மில்லியனாக அதிகரித்துள்ளது என்றும், 1.5 கோடி வாகனங்களும் அங்கு புழக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.

நிலத்தைப் பொறுத்தவரை, இந்த 2023ல் பெங்களூரு 88 சதுர கிலோமீட்டரிலிருந்து 985 சதுர கிலோமீட்டராக விரிவடைந்துள்ளதாக அறிக்கை கூறுகிறது. மேலும் 1,100 சதுர கிலோமீட்டராக விரிவுபடுத்தவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. "மறுபுறம், சாலையின் நீள வளர்ச்சியானது வாகன வளர்ச்சி மற்றும் பரப்பளவு வளர்ச்சியின் விகிதத்தோடு ஒத்துப்போகவில்லை என்று கூறப்படுகிறது. அங்கிருக்கும் சாலையின் மொத்த நீளம் சுமார் 11,000 கிலோமீட்டர் ஆகும், இது பெங்களுருவின் போக்குவரத்து தேவை மற்றும் பயணங்களை பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை" என்று அறிக்கை கூறுகிறது.

"மக்கள்தொகையின் அதிவேக வளர்ச்சி மற்றும் அவர்களின் வேலை வாய்ப்பு வேகம் தற்போதுள்ள உள்கட்டமைப்பு வளர்ச்சியுடன் பொருந்தவில்லை என்றும் கூறப்படுகிறது. இந்த இடைவெளி குறைவினால் தான் சாலைகளில் தாமதம், நெரிசல், அதிக பயண நேரம் மற்றும் நேரடி மற்றும் மறைமுக செலவின் அடிப்படையில் பெரும் பொருளாதார இழப்பு (அடையாளம் இல்லாதது) ஏற்படுகிறது,” என்று ஸ்ரீஹரி மற்றும் அவரது குழுவினர் தெரிவித்தனர்.

நகரின் ரேடியல், வெளிப்புற மற்றும் சூழ்நிலை வளர்ச்சிக்கு ஏற்றவாறு சாலைகளை திட்டமிட்டு அமைக்க வேண்டியதன் அவசியத்தை ஸ்ரீஹரி வலியுறுத்தியுள்ளார். சாலைப் போக்குவரத்தை சுற்றி மெட்ரோ ரெயிலையும், ஒன்று அல்லது இரண்டு வட்ட வழித்தடங்களையும் இணைக்க அவர் பரிந்துரைத்துள்ளார். இது தவிர, தற்போதுள்ள சிஆர்எஸ் (கம்யூட்டர் ரெயில் சிஸ்டம்) பெங்களூருவின் போக்குவரத்து வலையமைப்பை ஆதரிக்க இந்திய ரயில்வேயால் அனுமதிக்கப்படுகிறது என்றும் அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

உத்திரபிரதேசம்.. மீரட் மருத்துவக் கல்லூரியில் 80 கர்ப்பிணிப் பெண்களுக்கு HIV - அதிர்ச்சியில் மூழ்கிய மக்கள்!