Asianet News TamilAsianet News Tamil

புக் செய்த கார்.. டைம் ஆனதால் ரத்து செய்த பெண்.. ஆத்திரத்தில் ஆபாச போட்டோ, வீடியோ அனுப்பிய டிரைவர்..!

 தனது வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மகளின் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த பேரன்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டு மீண்டும் வீட்டுக்கு புறப்படுவதற்காக ரைடு-ஷேரிங் ஆப் மூலம் கார் முன்பதிவு செய்துள்ளார். 

Bengaluru cancels cab ride.. Taxi Driver Angry nude photos videos
Author
First Published Oct 13, 2023, 2:13 PM IST

முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரத்தில் பெண்ணின் வாட்ஸ்அப்-க்கு ஆபாச போட்டோ, வீடியோ அனுப்பிய ஓட்டுநரை போலீசார் தேடி வருகின்றனர். 

கர்நாடகா மாநிலம் பெங்களூரு எலெக்ட்ரானிக் சிட்டியில் உள்ள ஒரு அடுக்கு மாடி குடியிருப்பில் இளம்பெண் ஒருவர் 6 வயது சிறுமி மற்றும் 9 மாத கைக்குழந்தையுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், தனது வீட்டிலிருந்து சுமார் 1 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள தனது மகளின் பள்ளிக்கு சென்றுள்ளார். அங்கு நடந்த பேரன்ட்ஸ் மீட்டிங்கில் கலந்து கொண்டு மீண்டும் வீட்டுக்கு புறப்படுவதற்காக ரைடு-ஷேரிங் ஆப் மூலம் கார் முன்பதிவு செய்துள்ளார். 

Bengaluru cancels cab ride.. Taxi Driver Angry nude photos videos

அப்போது குழந்தை அழ ஆரம்பித்தது.  இதனால் ஆட்டோவில் புறப்பட அந்த பெண் தயாரானார். அந்த நேரத்தில் வாடகை கார் ஓட்டுநர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு பக்கத்தில் வந்துவிட்டதாக கூறியுள்ளார். ஆனால் புக் செய்த கார் நீண்ட நேரமாகியும் வரவில்லை. பின்னர் தனது குழந்தை அழுது கொண்டே இருந்ததால் ஆட்டோவில் வீட்டுக்கு சென்றுவிட்டார். 

Bengaluru cancels cab ride.. Taxi Driver Angry nude photos videos

பின்னர் மீண்டும் வாடகை கார் ஓட்டுநர் இளம்பெண்ணை தொடர்பு கொண்டு வந்து விட்டதாக தெரிவித்தார். ஆனால் அந்த இளம்பெண் கார் வேண்டாம் என்று கூறிவிட்டார். முன்பதிவு செய்த காரை ரத்து செய்ததால் ஆத்திரமடைந்த கார் ஓட்டுநர் அந்த இளம்பெண்ணின் வாட்ஸ் அப்பிற்கு ஆபாச போட்டோ, வீடியோக்களை அனுப்பி உள்ளார். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கார் ஓட்டுநரை தேடிவருகின்றனர்.

Follow Us:
Download App:
  • android
  • ios