பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் மனவேதனை அடைந்த மேற்கு வங்க ஆசிரியர் சபீர் உசேன், இஸ்லாத்தைத் துறக்க முடிவு செய்துள்ளார். மத அடையாளத்தை கைவிட நீதிமன்றத்தை அணுகுவதாகவும், மனிதனாக அறியப்பட விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலால் ஏற்பட்ட ஆழ்ந்த வேதனை காரணமாக , மேற்கு வங்காளத்தின் பதுரியாவைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் சபீர் உசேன், இஸ்லாத்தை கைவிட முடிவு செய்துவிட்டதாக அறிவித்துள்ளார். மத சார்பற்ற வாழ்க்கையை வாழ, தனது மத அடையாளத்தை கைவிட நீதிமன்றத்தை அணுக இருப்பதாக ஹுசைன் கூறியுள்ளார்.

"எந்தவொரு மதத்தையும் நான் அவமதிக்க விரும்பவில்லை - இது ஒரு தனிப்பட்ட விருப்பம். மீண்டும் மீண்டும் வன்முறைக்கு மதம் எவ்வாறு கருவியாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை நான் கண்டிருக்கிறேன். குறிப்பாக காஷ்மீரில். இதை இனி என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஒரு மனிதனாக அறியப்பட விரும்புகிறேன், எந்த மத முத்திரையாலும் அல்ல. அதனால்தான் நீதிமன்றத்தில் முறையான விண்ணப்பத்தை சமர்ப்பிக்க விரும்புகிறேன்" என்று ஹுசைன் கூறியுள்ளார்.

இந்தியா - பாகிஸ்தான் சண்டை 1000 வருஷமா நடக்குது: டொனால்டு டிரம்ப் கருத்து

அனைத்து மதங்களுக்கும் மரியாதை:

அனைத்து மதங்களுக்கும் மரியாதை செலுத்த வலியுறுத்தியும் ஹுசைன், பஹல்காமில் நடந்ததைப் போன்ற வன்முறை சம்பவங்களில் மத அடையாளம் எவ்வாறு தவறாகப் பயன்படுத்தப்படுகிறது என்பதை வெளிப்படுத்தினார் . "ஒருவர் ஏன் தனது மதத்திற்காகக் கொல்லப்பட வேண்டும்? அதுதான் என்னை மிகவும் வருந்தச் செய்கிறது" என்று அவர் கூறுகிறார்.

ஹுசைன் ஆரம்பத்தில் தனது முடிவை பேஸ்புக்கில் பகிர்ந்துகொண்டார், பின்னர் இஸ்லாத்திலிருந்து சட்டப்பூர்வமாக விலகுவதற்கான தனது திட்டத்தை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், தனது நம்பிக்கைகளை தனது குடும்பத்தின் மீது திணிக்க மாட்டேன் என்று அவர் தெளிவுபடுத்தினார்.

தனிப்பட்ட முடிவு:

"என் மனைவி மற்றும் குழந்தைகள் அவர்கள் தேர்ந்தெடுக்கும் எந்த பாதையையும் பின்பற்றும் சுதந்திரம் உள்ளது. இது எனது தனிப்பட்ட முடிவு. நான் இனி இஸ்லாத்துடன் என்னை இணைத்துக்கொள்ள மாட்டேன்" என்று அவர் தெரிவிக்கிறார்.

மேலும், தனது மத அடையாளம் குறித்து தொடர்ந்து கேள்விகள் கேட்பதில் அசௌகரியமாக உணர்வதாகவும் அது பிரிவினையை வளர்க்கிறது என்றும் குறிப்பிடுகிறார்.

EPFO கணக்குதாரர்களுக்கு குட் நியூஸ்! படிவம் 13 சாப்ட்வேரில் புதிய அப்டேட்!