IT sends final notice to Lalu Prasad Yadav and his family
ராஷ்ட்ரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில முன்னால் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், அவரின் குடும்பத்துக்கு சொந்தமான ரூ.9.32 மதிப்பிலான சொத்துக்களை பினாமி சட்டத்தின் கீழ் முடக்கி வருமான வரித்துறை இறுதி நோட்டீஸ் அனுப்பியது.
ஏ.பி. எக்ஸ்போர்ட்ஸ் பிரைவேட் லிமிட் என்ற நிறுவனத்திடம் இருந்து லாலு பிரசாத் அவரின் உறவினர்கள் குறைந்த விலைக்கு சொத்துக்களை விலைக்கு வாங்கி ஆதாயம் அடைந்துள்ளனர். இந்த சொத்துக்கள் அனைத்தும், டெல்லியின் தெற்குப்பகுதியில் உள்ள நியூஸ் பிரண்ட்ஸ் காலணியில் அமைந்துள்ளது அது முடக்கப்பட்டது என அதிகாரிகள்தரப்பில் கூறப்பட்டது.
இது தொடர்பான முதல் கட்ட உத்தரவு கடந்த ஜூன் மாதமே வழங்கப்பட்டு விட்ட நிலையில், நீதிமன்றத்தில் அந்த உத்தரவு தற்போதுஉறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து, லாலு பிரசாத், அவரின் மனைவி ராப்ரி தேவி, லாலுவின்மகன் தேஜஸ்வி யாதவ், மகள் சந்தா, ராகினி யாதவ், மிசா பாரதி, எம்.பி. சைலேஷ் குமார் ஆகியோருக்கு வருமானவரித்துறை நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.
இவர்களுக்கு சொந்தமாக டெல்லியில் பாலம் விகார் பகுதியில் இருக்கும் ஏராளமான வீடுகள், கட்டிடங்கள், பீகாரில் இருக்கும் பண்ணை வீடுகள், டெல்லி நியூ பிரண்ட்ஸ் காலனியில் இருக்கும் 9 குடியிருப்்புகள், ஷாப்பிங் மால்கள் முடக்கப்பட்டன.
இந்த சொத்துக்களின் மதிப்பு ரூ.9.32 கோடி என பொய்யான கணக்குகாட்டப்பட்டுள்ளது. ஆனால், இதன் சந்தை மதிப்பு ரூ.170 முதல் 180 கோடியாகும். இதையடுத்து பினாமி பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்த லாலு பிரசாத், அவரின் உறவினர்கள் மீது பினாமி சட்டத்தின் கீழ் வருமானவரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது
