Bangladesh fan drapes India flag around dog ahead of ICC Champions Trophy semifinal

வங்காளதேச ரசிகர் ஒருவர் இந்திய தேசியக் கொடியை நாய் மீது வரைந்து, அதை புலி துரத்துவது போன்ற படத்தை சமூக வலைதளத்தில் பரப்பி தேசியக்கொடிக்கு அவமதிப்பு செய்துள்ளார்.

ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-வங்காளதேசம்இடையிலன அரையிறுதி ஆட்டம் இன்று நடக்க உள்ளது. அதற்குள் அந்த நாட்டு ரசிகர்கள் ஆர்வமிகுதியில் இதுபோன்ற சர்ச்சைக்குரிய செயல்களில் ஈடுபட்டு ஒரு நாட்டின் தேசியக் கொடியை அவமதித்து வருகின்றனர்.

வங்காளதேச அணியை கிரிக்கெட்டில் ‘புலி’ என்ற அடைமொழியில் அந்நாட்டு ரசிகர்கள் அழைப்பார்கள். அதைச் சுட்டிக்காட்டி, புலி மீது வங்காளதேசத்தின் தேசியக்கொடியை வரைந்து, நாய் படத்தின் மீது இந்திய தேசியக் கொடியை வரைந்து சிறுமைப்படுத்தி உள்ளனர்.

இந்த படத்தை சிபாத் அப்துல்லா என்ற வங்காளதேச நாட்டவர் பேஸ்புக்கில்பதிவேற்றம் செய்துள்ளார். இந்த போட்டி மிகப்பெரிய அளவில் பேசப்படும் என்றும் கருத்து பதிவிட்டுள்ளார்.

இந்திய அணிக்கும், தேசியக்கொடிக்கும் வங்காளதேச ரசிகர்கள் சிறுமை செய்வது தொடர்ந்து நடந்து வருகிறது. இதற்கு முன், கடந்த 2015ம் ஆண்டு அந்நாட்டு அணியின் முஸ்தாபிசுர் ரஹ்மான் பந்துவீச்சில் இந்திய அணி வீரர்கள் ஆட்டமிழந்து ஒருநாள் தொடரை இழந்தது. இதைச் சுட்டிக்காட்டி இந்திய அணி வீரர்கள் தோனி, விராத் கோலி, தவான், ரகானே, ரோகித் சர்மா, அஸ்வின்ஆகியோரின் தலையை பாதி மழித்தது போன்ற புகைப்படத்தை பிரசுரித்து இருந்தனர்.

அதற்குமுன், கடந்த ஆண்டு ஆசியக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியாவை வீழ்த்தும் வகையில், கேப்டன் தோனியின் தலையை வெட்டி, அந்நாட்டு வீரர்தஸ்கின் அகமது கையில் வைத்து இருப்பது போன்ற புகைப்படம் வௌியானதுகுறிப்பிடத்தக்கது.