புதுவையில் நடைபெற உள்ள இடைதேர்தலை முன்னிட்டு வருகிற 17ஆம் தேதி முதல் 19ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுவை மாநிலம் நெல்லித்தோப்பு தொகுதியில்; வரும் 19ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை முன்னிட்டு அம்மாநிலத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன.

தேர்தல் நடத்தை விதிமுறைப்படி தேர்தல் நடைபெறும் நாளும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளில் மதுக்கடைகள் மூடப்படும் என கலால்துறை அதிகாரி ஆபேல் ரோசாரியா அறிவித்துள்ளார்.
அதாவது, பிரச்சாரம் முடியும் நாளான 17ஆம் தேதி மாலை 5 மணி முதல் 19ம் தேதி வரை அனைத்து மதுபான கடைகள் மற்றும் மதுக்கூடங்கள் மற்றும் ஹோட்டல்கள், கிளப்புளில் மதுபானம் மற்றும் பீர் வகைகள் விற்பனை முடக்கம் செய்யப்படுகிறது.
அதேபோல், வாக்கு எண்ணிக்கையை முன்னிட்டு வரும் 22ம் தேதியும் மதுக்கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
