Asianet News TamilAsianet News Tamil

பத்திர பதிவிற்கு மீண்டும் தடையா..? உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல்..

ban for land registration
ban for-land-registration
Author
First Published Mar 31, 2017, 4:49 PM IST


தமிழகத்தில் விவசாய  நிலங்களை  மனைகளாக போட்டு  விற்பனை  செய்வதற்கு தடை விதிக்க  கோரி வழக்கறிஞர்  யானை  ராஜேந்திரன்  தொடர்ந்த  வழக்கின்  எதிரொலியாக  கடந்த 6  மாத காலமாக  தமிழகத்தில்  பத்திரபதிவு வெகுவாக  குறைந்து விட்டது. இதற்கான  தடை உத்தரவையும்  கடந்த செப்டம்பர் 9 ஆம் தேதி  உயர்நீதிமன்றம்  அறிவித்தது .

இதற்கு பின் , வகைபடுத்தப்பட்ட  நிலத்தின்  விவரங்களை  அறிக்கையாக  தமிழக  அரசு  உயர்நீதிமன்றத்தில் தாக்கல்  செய்தது . இதனை தொடர்ந்து  நேற்று முன்தினம், பத்திரபதிவு தொடர்பாக தீர்ப்பை  வழங்கியது  உயர்நீதிமன்றம் .

அதில்,அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு ஏற்கனவே விற்பனை செய்திருந்தால், அதை மறுவிற்பனை செய்யலாம் என்றும்,

மேலும், அங்கீகாரம் இல்லாத விற்பனை செய்யப்படாத வீட்டு மனைகளை பத்திரப்பதிவு செய்யக்கூடாது  என  கூறி , அதன் மீதான தடையை நீட்டித்து, இந்த  வழக்கின்   மீதான விசாரணையை ஏப்ரல் 7  ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது .

இந்நிலையில், அங்கீகாரம் இல்லாத வீட்டு மனைகளை கடந்த 2016-ஆம் ஆண்டு அக்டோபர் 20-ம் தேதிக்கு முன்பு ஏற்கனவே விற்பனை செய்திருந்தால், அதை மறுவிற்பனை செய்யலாம் என  உயர்நீதிமன்றம்  அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கியதையடுத்து, இதற்கு எதிராக  மீண்டும் வழக்கறிஞர் யானை  ராஜேந்திரன்  உச்ச  நீதிமன்றத்தில்  மனு  தாக்கல்  செய்துள்ளார் .

 எனவே  பத்திரபதிவு  செய்வதற்கு மீண்டும்  தடை  விதிக்கப் படுமா என்ற  சந்தேகம் எழுந்துள்ளது .

Follow Us:
Download App:
  • android
  • ios