மோடியின் மிகப்பெரிய மூலதனம், அவரது ‘வாய்’. அதை வைத்துதான் குஜராத்தின் முதல்வராக மட்டுமல்ல இந்த தேசத்தின் பிரதமராகவும் ஆனார்.  பல நாடுகளுக்கும் பறந்து பறந்து அவர் ஆற்றிய ‘அடிச்சு தூக்கும்’ உரைகள்தான் அவருக்கு சர்வதேச அளவில் அதிரடி தலைவர் அந்தஸ்தை பெற்றுத் தந்தன. ஆனால் எது நம்முடைய பலமாக இருக்கிறதோ அதுவே ஒரு நாள் நமது பலவீனமுமாக மாறுவதுதானே வாழ்க்கை! அந்த வகையில் மோடியின் அதிரை வாயே இன்று அவருக்கு துஷ்மனாக மாறி இருக்கிறது. அவர் அடித்துவிட்ட விஷயங்களே இன்று அவரை விரட்டி விரட்டி கிண்டலடிக்கின்றன. 

விஷயம் இதுதான்........... “பாலகோட் தாக்குதலுக்கு முதல் நாள் இரவில் நம் படையின் தயார் நிலை குறித்து ஆய்வு செய்தேன். அப்போது வானிலை மிக மோசமாகி, மழை பெய்ய துவங்கியது. அதனால் தாக்குதலை நடத்தலாம வேண்டாமா என்றெல்லாம் குழப்ப ஆலோசகனைகள் நடந்தன. தாக்குதல் தேதியை மாற்றலாம் என நிபுணர்கள் கூறினர். ஆனால் நான் தாக்குதல் முடிவில் உறுதியாக இருந்தேன். எனக்கு அறிவியல் எல்லாம் தெரியாது. ஆனால் என் மனம் ஒன்றை சொல்லியது. அதாவது...நல்ல மேகமூட்டத்துடன் மழை பெய்வதால், நமது போர் விமானங்கள் பாகிஸ்தானின் ரேடாரிலிருந்து தப்புவதற்கு வசதியாக இருக்குமென நினைத்ஹ்டேன். எல்லோரும் குழப்பமாக இருந்த நேரத்தில் நான் தாக்குதலை நடத்த சம்மதித்தேன்.” என்று சொல்லியிருந்தார் சமீபத்திய பேட்டியில்... மோடியின் இந்த வாய்ஜாலத்தை ஆளாளுக்கு வைத்து கிழிக்க துவங்கிவிட்டனர். 

 

மார்க்சிஸ்ட் பொதுச்செயலாளர் யெச்சூரி தனது ட்விட்டரில் “நம் விமானப்படையினர் என்னமோ விபரம் இல்லாதவர்கள் போல் பேசி, அவமானப்படுத்தி இருக்கிறார் மோடி. மிக வெட்கக்கேடான பேச்சு. இவரது பேச்சு நம் நாட்டுக்கு எதிரானது. தன்னை மிகப்பெரிய தேச பக்தராக கூறுகிறார். ஆனால் எந்த தேசபக்தரும் இப்படி பேசமாட்டார்கள். இது போன்ற நபர்கள் பிரதமராக இருக்கவே முடியாது.” என்று வெளுத்தார். 

அடுத்து காங்கிரச் சார்பாக சல்மான் சோஸ் “ரேடார் எப்படி வேலை செய்யுமுன்னு கூட தெரிஞ்சு வெச்சுக்காத பிரதமரா இருக்கிறாரே. ரேடாரின் சிறப்பே, அதிலிருந்து வெளிப்படும் கதிரியக்க அலைகள் மேகங்கள் மற்றும் மோசமான வானிலையை ஊடுருவ கூடியவை. மேக மூட்டமாக இருந்தாலும் கூட வானில் பறக்கும் பொருட்களை ரேடாரால் கண்டுபிடிக்க முடியும்.என்ன மோடி நீங்க?” என்று கிண்டலடித்து கவுத்தியதோடு, மோடிக்கு ரேடார் பற்றி பாடமும் எடுத்துவிட்டார். ஆக ரேடாரை வெச்சு பிரதமர் மோடியை ஆளாளுக்கு பிரிச்சு மேய்வதைப் பார்த்து நொந்த பி.ஜே.பி.யின் மிக முக்கிய நிர்வாகிகள், கட்சியின் ட்விட்டர் பக்கத்தில் இருந்து பிரதமர் மோடியின் அந்த பேட்டியில், ரேடார் பற்றிய விஷயங்கள் நீக்கப்பட்டுவிட்டதாம். எப்படி இருந்த மனுஷனை இப்படி ரேடார் மூலமா வெச்சு செஞ்சுட்டாங்களே!