விடுதலைப் போராட்ட வீரர் பாலகங்காத திலகரின் கொள்ளுப்பேரன் ரோகித், பாலியல் குற்றச்சாட்டு புகாரின்பேரில் புனே போலீசார் கைது செய்துள்ளனர்.

சுதந்திர போராட்ட வீரர் பாலகங்காதர திலகரின் கொள்ளுப்பேரன் ரோகித் திலக். இவர் மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய உறுப்பினராக உள்ளார். ரோகித் திலக்-ன் தாத்தா ஜெயந்த்ராவ் திலக், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தவர். 

இந்த நிலையில், புனே போலீஸ் நிலையத்தில், 40 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் ரோகித் மீது பாலியல் புகார் செய்துள்ளார். ரோகித்துக்கும், அந்த பெண்ணுக்கும், கடந்த சில வருடங்களாக தொடர்பு இருந்ததாகவும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் அந்த புகாரில் தெரிவித்திருந்தார். 

அந்த பெண்ணின்  புகாரை அடுத்து ரோகித் மீது பாலியல் குற்றச்சாட்டு மற்றும் மிரட்டல் என பல்வேறு பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்து, ரோகித்தை கைது செய்துள்ளது புனே போலீசார். இது தொடர்பாக ரோகித்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.