Badal resign cm post
பஞ்சாப் முதல்வர் பதவியை நாளை ராஜினாமா செய்கிறார் பாதல்
பஞ்சாப் மாநிலத்தில் சிரோன் மணி அகாலிதளம் பாரதியஜனதா கூட்டணி படுதோல்வி அடைந்ததைத் தொடர்ந்து, முதல்வர் பதவியை இன்று ராஜினாமா செய்யப்போவதாக பிரகாஷ் சிங் பாதல் தெரிவித்துள்ளார்.
பஞ்சாப் மாநிலத்தில் கடந்த 10 ஆண்டுகளாக சிரோன்மணி அகாலிதளம், பாரதிய ஜனதா கூட்டணி ஆண்டு வந்த நிலையில், இந்த தேர்தலில் ஆட்சியை காங்கிரஸ் கட்சியிடம் பறிகொடுத்துள்ளது.
இந்நிலையில், பாட்டியாலாவில் நிருபர்களுக்கு முதல்வர் பிரகாஷ்சிங் பாதல்அளித்த பேட்டியில் கூறுகையில், “ சண்டிகாருக்கு நாளை புறப்பட்டுச் செல்கிறேன். அங்கு ஆளுநர் வி.பி.சிங் பட்நூரை சந்தித்து எனது ராஜினாமா கடிதத்தை அளிப்பேன். பஞ்சாப்பில் எங்கள் கட்சி அடைந்த தோல்விக்கு என்ன காரணங்கள் என்பது குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு ஆய்வு செய்யும். தேர்தலில் எங்களின் ஒவ்வொரு அனுமுறை குறித்தும் நாங்கள் விவாதிப்போம்'' என்றார்.
இதற்கிடையே லம்பி தொகுதியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளர் கேப்டன்அமரிந்தர் சிங்கை தோற்கடித்தார் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல். அமரிந்தர் சிங்கை 22 ஆயிரத்து 702 வாக்குகள் வித்தியாசத்தில் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல்தோற்கடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேசமயம், மற்றொரு தொகுதியான பாட்டியாலாவில் போட்டியிட்ட அமரிந்தர் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
