ஐப்பசி மாதத்தில் அதிர்ந்த அய்யப்ப பக்தர்கள்… முதல்வர் போட்ட உத்தரவு
புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
திருவனந்தபுரம்: புகழ்பெற்ற சபரிமலை அய்யப்பன் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள பத்தினம்திட்டா மாவட்டத்தில் பிரபலமான அய்யப்பன் கோயில் அமைந்திருக்கிறது. இந்த கோயிலில் அய்யப்பனை வழிபட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்வர்.
ஆனால் கொரோனா தொற்று பரவல் காரணமாக ஓராண்டு காலமாக இங்கு வர பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந் நிலையில் ஐப்பசி மாத பூஜைகளுக்காக சபரிமலை அய்யப்பன் கோயில் நடை நேற்று திறக்கப்பட்டது.
இன்று முதல் வரும் 21ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் கோயிலில் நடக்க உள்ளன. இந் நிலையில் சபரிமலையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இது குறித்து அறிவிப்பை முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டு உள்ளார்.
கேரளாவில் எர்ணாகுளம், இடுக்கி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது. தொடரும் மழையால், பம்பை ஆற்றில் நீர்வரத்தும் அதிகரித்து காணப்படுகிறது. அதன் காரணமாக தான் பக்தர்கள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது