அயோத்தி ராமர் கோயில் கருவறையின் புகைப்படங்கள் வெளியீடு! இன்னும் 10% வேலை தான் பாக்கி!
அயோத்தி கோயிலில் ராமர் சன்னதி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது என்றும் விளக்குகள் பொருத்தும் பணியும் சமீபத்தில் முடிந்தது என்றும் சம்பத் ராய் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22ஆம் தேதி அயோத்தியில் ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளதை முன்னிட்டு, ராம் ஜென்மபூமி அறக்கட்டளையின் பொதுச் செயலாளர் சம்பத் ராய் சனிக்கிழமையன்று கோயில் கருவறையின் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
ட்விட்டர் பக்கத்தில் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ள சம்பத் ராய், "பகவான் ஸ்ரீ ராம் லாலாவின் சன்னதி கிட்டத்தட்ட தயாராகிவிட்டது. விளக்குகள் பொருத்தும் பணியும் சமீபத்தில் முடிந்தது. சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக வெள்ளிக்கிழமை, ராம ஜென்மபூமி கோவிலின் தற்போதைய நிலையைக் காட்டும் புகைப்படங்களை அறக்கட்டளை பகிர்ந்துள்ளது. அறக்கட்டளையின் மேற்பார்வையில் கோயில் கட்டும் பணி சீரான வேகத்தில் நடைபெற்று வருகிறது.
அயோத்தி ராமர் கோயில் கருவறையின் புகைப்படங்கள் வெளியீடு! இன்னும் 10% வேலை தான் பாக்கி!
அயோத்தியில் மூன்று இடங்களில் கட்டப்படும் ராமரின் குழந்தை வடிவ சிலை 90% தயாராக உள்ளது என்றும் சம்பத் ராய் கூறியுள்ளார். "ராம ஜென்மபூமி கோவிலில், மூன்று இடங்களில் ராமரின் 5 வயது குழந்தை வடிவத்தை சித்தரிக்கும் சிலை அமைக்கப்படுகிறது. மூன்று சிற்பக் கலைஞர்கள் மூன்று வெவ்வேறு கற்களில் சிலையை உருவாக்குகின்றனர். இந்தச் சிலைகள் 90 சதவீதம் தயாராக உள்ளன. ஒரு வாரத்தில் இறுதிக்கட்ட பணிகள் நடைபெறும்" என அவர் கூறினார்.
மேலும், அடுத்த ஆண்டு ஜனவரி 22 ஆம் தேதி நடைபெறும் ராம் லல்லாவின் சிலை பிரதிஷ்டை விழாவிற்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அயோத்தி நகரில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தங்குவதற்காக ஏற்பாடு நடந்து வருவதாக அதிகாரி ஒருவர் தெரிவிக்கிறார்.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்துகொள்கிறார். அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்காக 2020 ஆகஸ்ட் 5ஆம் தேதி பிரதமர் மோடிதான் அடிக்கல் நாட்டினார்.
மத்திய அரசு நிதியை மட்டும் நிவாரணமாக அறிவித்த ஸ்டாலின்... தமிழக அரசின் பங்கு என்ன? அண்ணாமலை கேள்வி