அயோத்தி ராமர் கோவில் திறக்கப்பட்ட உடன், பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமின்றி ஆரத்தி விழாவிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் கோவில் அறக்கட்டளை வழங்கியுள்ளது.
ராமர் பிறந்த அயோத்தியில் கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட ராமர் கோவில் வரும் ஜனவரி 22ம் தேதி திறக்கப்பட உள்ளது. ராம ஜென்மபூமி தீர்த்தக்ஷேத்ரா அறக்கட்டளை, நாட்டு மக்களின் பங்கேற்புடன் ராமர் கோவிலை பிரமாண்டமாக கட்டியுள்ளது. ராமர் கோயில் கட்டுமான பணிகள் முடிவடைந்த நிலையில், ராமர் சிலையை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. பிரதமர் நரேந்திர மோடி அயோத்தி ராமர் கோவிலை ஜனவரி 22, 2024 அன்று திறந்து வைக்க உள்ளார்.
அதன்பின்னர் ராமர் சிலை கோயில் கருவறையில் நிறுவப்படும். அயோத்தி ராமர் கோவிலை திறந்ததும் பக்தர்களுக்கு சுவாமி தரிசனம் வழங்கப்படும். அன்றைய தினம் ராமரை தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் காலை 7 மணி முதல் கோயிலுக்குள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 11.30 மணி வரை பக்தர்களுக்கு ராமர் தரிசனம் வழங்கப்படும். அதன்பின், இரண்டரை மணி நேரம் கோவில் மூடப்பட்டு, மதியம் 2 மணிக்கு திறக்கப்படும். அன்று முதல் இரவு 7 மணி வரை பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள். அதன்பின்னர் ராமர் கோயில் நடை சாத்தப்படும்.
ஏசியாநெட்தமிழ்செய்திகளைஉடனுக்குஉடன் Whatsapp Channel-லில்பெறுவதற்குகீழேகொடுக்கப்பட்டுஇருக்கும்லிங்குடன்இணைந்துஇருக்கவும்.
Click this link:https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D
பக்தர்கள் தரிசனம் செய்ய மட்டுமின்றி ஆரத்தி விழாவிலும் பங்கேற்கும் வாய்ப்பையும் அயோத்தி கோவில் அறக்கட்டளை வழங்கியுள்ளது. கோயில் திறக்கப்பட்ட உடன் தினமும் காலை மாலை என இரு வேளைகளிலும் ஆரத்தி எடுக்கப்படும். றினார். இதில் பங்கேற்க பக்தர்கள் முந்தைய நாளே முன்பதிவு செய்ய வேண்டும். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பக்தர்களுக்கு மட்டுமே ஆரத்தியில் பங்கேற்க வாய்ப்பு அளிக்கப்படும். தினமும் காலை 6.30 மணிக்கு ஸ்ரீங்கர் ஆரத்தியும், இரவு 7.30 மணிக்கு சந்தியா ஆரத்தியும் நடக்கும். இதற்கு, அன்றைய தினம் கோயில் வளாகத்திலேயே முன்பதிவு செய்யும் வசதியும் உள்ளதாக கோவில் அறக்கட்டளை அறிவித்துள்ளது.
இதனிடையே ராமர் கோயில் திறப்பு விழாவுக்கு ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த க்ஷேத்ரா அறக்கட்டளை, நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த சுமார் 3,000 வி.வி.ஐ.பி.க்கள், 4,000 துறவிகள் மற்றும் துறவிகள், 50 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் மற்றும் ராமர் கோயிலில் அங்கம் வகிக்கும் 'கர சேவககர்களின் குடும்ப உறுப்பினர்கள் உட்பட 7,000 பேருக்கு அழைப்பிதழ்களை அனுப்பியுள்ளது.
அயோத்தி சாலைகளில் தமிழ் எழுத்துகள்.. ராமர் கோவில் கும்பாபிஷேக விழாவில் தடபுடல் ஏற்பாடுகள்..
உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத், பாலிவுட் மெகாஸ்டார் அமிதாப் பச்சன், பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார், நடிகை கங்கனா ரணாவத், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், கிரிக்கெட் வீரர் விராட் கோலி, ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், யோகா குரு ராம்தேவ், மற்றும் தொழிலதிபர்கள் முகேஷ் அம்பாய், ரத்தன் டாடா மற்றும் கௌதம் அதானி ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கோயில் திறப்பு விழாவுக்கான முன்னேற்பாடுகளை ஸ்ரீ ராம ஜென்மபூமி அறக்கட்டை சிறப்பாக மேற்கொண்டு வருகிறது.
