1992 முதல் 2024 வரை அயோத்தி ராமர் கோயிலுக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பு!

தற்போது முதல் நபராக கும்பாபிஷேக தினத்தன்று பிரதமர் மோடி அயோத்திர ராமர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். கும்பாபிஷேக விழாவின் யாகத்துடன் அவரது 30 ஆண்டுகால உறுதிமொழியும் நிறைவேறிவிடும்.

Ayodhya Ram Temple And PM Modi's January Link: From 1992 To 2024 sgb

அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெறும் நாள் நெருங்கி வருகிறது. லட்சக்கணக்கான ராம பக்தர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறுகிறது.

அதேபோல பிரதமர் மோடி 30 ஆண்டுகளுக்கு முன் அறிவித்த உறுதிமொழியும் நிறைவேறப் போகிறது. 1992ஆம் ஆண்டு ஜனவரி 14ஆம் தேதி பிரதமர் மோடி, அயோத்தியில் ஒருநாள் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டப்படும் என்று உறுதிமொழி எடுத்தார்.

சுமார் 500 ஆண்டுகளுக்கு முன்பு, பாபரின் தளபதி மிர் பாக்கி, ராமர் பிறந்த இடத்தில் கட்டப்பட்ட கோவிலை இடித்து பாபர் மசூதியைக் கட்டினார். இந்துத்துவ அமைப்புகள் சுதந்திரத்திற்கு முன்பிருந்தே ராமர் பிறந்த இடத்தில் கோவில் கட்ட வேண்டும் என்று வலியிறுத்தி வந்தனர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவது பற்றி தொடர்ந்து பேசிவருகின்றனர்.

முதல் முறையாக ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் மூலம் விண்ணில் ஏவப்படும் இஸ்ரோ விண்கலம்!

Ayodhya Ram Temple And PM Modi's January Link: From 1992 To 2024 sgb

1990களில் ராமர் கோவில் இயக்கத்தை பாஜக தீவிரப்படுத்தியது. அப்போது, பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி தலைமையில் சோம்நாத்தில் இருந்து புறப்பட்ட ரத யாத்திரையின் முக்கிய ஒருங்கிணைப்பாளராக மோடி இருந்தார்.

டிசம்பர் 11, 1991-ல் கன்னியாகுமரியில் இருந்து பாஜக தொடங்கிய பிரச்சாரப் பயணம் ஜனவரி 14, 92-ல் அயோத்தியை அடைந்தது. இந்தப் பிரச்சாரப் பயணத்தில் மூத்த பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் அப்போது குஜராத் பாஜகவின் பொதுச் செயலாளராக இருந்த மோடியும் கலந்துகொண்டார். அயோத்தி சென்ற மோடி அங்கு கூடாரத்தில் இருந்த ராம் லல்லாவை தரிசித்தார்.

அப்போதுதான், பிரதமர் மோடி ராமர் கோயில் கட்டப்படும் என்று பிரதமர் மோடி உறுதிமொழி எடுத்ததாக அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் தெரிவிக்கின்றனர். பல ஆண்டுகளாக நீட்டித்த சட்டப் போராட்டம் முடிவுக்கு வந்து, கோவில் கட்டுவதற்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. அதனை அடுத்தது கோவில் கட்டும் பணியின் தொடக்க விழாவிலும் பிரதமர் மோடி கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.

தற்போது முதல் நபராக கும்பாபிஷேக தினத்தன்று பிரதமர் மோடி அயோத்திர ராமர் கோயிலில் தரிசனம் செய்ய உள்ளார். கும்பாபிஷேக விழாவின் யாகத்துடன் அவரது 30 ஆண்டுகால உறுதிமொழியும் நிறைவேறிவிடும்.

ஆனந்த் மஹிந்திராவையே அசர வைத்த வீடியோ! எப்படிப்பா இப்படியெல்லாம்!!

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios