அயோத்தி செல்லும் 11,000 பேருக்கு இரண்டு கிஃப்ட் பாக்ஸ்! உள்ளே என்னென்ன இருக்கும்?
அயோத்திக்கு வரும் விஐபி விருந்தினர்களுக்கு இரண்டு கிஃப்டு பாக்ஸ் வழங்கப்படும். ஒன்றில் பிரசாதம் இருக்கும். நெய்யில் செய்யப்பட்ட பெசன் லட்டு பிரசாத டப்பாவில் இருக்கும்.
அயோத்தியில் ராமர் கோயிலின் திறப்பு விழாவுக்கு வரும் ஆயிரக்கணக்கான விருந்தினர்களை வரவேற்று பரிசுப்பொருட்களை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அயோத்தியில் ராமர் கோயிலின் பிரம்மாண்ட திறப்பு விழா ஜனவரி 22ஆம் தேதி நடைபெற உள்ளது. 11,000க்கும் மேற்பட்ட விஐபி விருந்தினர்கள் இந்த விழாவில் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவர்களை வரவேற்க அயோத்தியில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
22ஆம் தேதி ராமர் கோவிலுக்காகப் பங்களித்த பல மகான்கள், பக்தர்கள் உள்ளிட்ட ஆன்மிகவாதிகள் அயோத்திக்கு வர உள்ளனர். இவர்கள் வரும் ஜனவரி 12ஆம் தேதியிலிருந்தே வரத் தொடங்குவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவர்களுக்காக ராம் நகரியில் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ராகுல் காந்தியின் யாத்திரைக்கு மணிப்பூர் அரசு நிபந்தனையுடன் அனுமதி!
அயோத்திக்கு வரும் விஐபி விருந்தினர்களுக்கு இரண்டு கிஃப்டு பாக்ஸ் வழங்கப்படும். ஒன்றில் பிரசாதம் இருக்கும். நெய்யில் செய்யப்பட்ட பெசன் லட்டு பிரசாத டப்பாவில் இருக்கும்.
கோவிலின் கருவறையிலிருந்து எடுக்கப்பட்ட மண், சரயு நதியின் தீர்த்தம், பித்தளை தட்டு, ராமர் கோயில் உருவான வரலாற்றின் அடையாளமாக ஒரு வெள்ளி நாணயம் போன்றவை இரண்டாவது பெட்டியில் வைக்கப்பட்டிருக்கும். ராமருடன் தொடர்புடைய இந்தப் பொருட்கள் அனைத்தும் சிறப்பாக அலங்கரிக்கப்பட்ட பெட்டியில் வைத்து விநியோகிக்கப்படும்.
ஜனவரி 12 முதல் அயோத்தியை அடையும் விருந்தினர்களுக்கு சனாதன் சேவா டிரஸ்ட் மூலம் இந்த நினைவுப் பரிசு வழங்கப்படும். இதுகுறித்து சனாதன் சேவா அறக்கட்டளையின் நிறுவனரும், ஜகத்குரு பத்ராச்சார்யாவின் சீடருமான ஷிவ் ஓம் மிஸ்ரா கூறுகையில், "சனாதன தர்மத்தில் விருந்தினர்கள் கடவுளுக்குச் சமமாகக் மதிக்கப்படுகிறார்கள். இத்தகைய சூழ்நிலையில், அயோத்தியை அடையும் அனைத்து விருந்தினர்களுக்கும் ராமர் தொடர்பான நினைவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு, அவர்களுக்கு பரிசாக வழங்கப்பட உள்ளன" என்கிறார்.
ஷிண்டே அணிதான் உண்மையான சிவசேனா! உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை: மகாராஷ்டிர சபாநாயகர்