உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு எதிராக ஆபாசமான மற்றும் அவதூறான கருத்துக்களை பேசிய குணால் கம்ராவுக்கு எதிராக அவமதிப்பு நடவடிக்கைகளைத் தொடங்க அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஒப்புதல் அளித்துள்ளார்.

”இரு விரல்களை நீட்டிய செயல், இந்தியாவின் தலைமை நீதிபதியை வேண்டுமென்றே அவமதிப்பதாகும்; இந்திய உச்சநீதிமன்றத்தையும் அவமதிப்பதாகும்” என்று வேணுகோபால் தெரிவித்துள்ளார்.

"அந்த ட்வீட் மிகவும் மோசமானது. மேலும் இது இந்திய உச்சநீதிமன்றத்தின் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குறைமதிப்பிற்கு உட்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை” என்றும் தெரிவித்தார்.