இந்தியா முழுதும் புதிய ரூபாய் நோட்டுக்களை பெரும் வகையில் வெறும் 25 சதவித ஏ.டி.எம்.,கள் மட்டுமே தயார் நிலையில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரதமர் மோடி கடந்த வாரம் 500, 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என,நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி அளித்தார். இதனால், மக்கள் தங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக ஏ.டி.எம்., மையங்களிலும், வங்கி வாசல்களிலும் தவியாய் தவிக்கும் அவலநிலை உருவாகிது.

மோடியின் அறிவிப்பு வெளியாகி 12 நாட்களாகியும்,இன்றளுவும் நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும், ஏ.டி.எம்., மையங்களிலும் கூட்டம் குறைந்தபாடில்லை. வங்கிகளில் நின்றால் நீண்டநேரம் ஆகும் என்பதால்,பெரும்பாலான மக்கள் ஏ. டி.எம்., மையங்களுக்கு செல்கின்றனர். ஆனால், பெரும்பாலான இயந்திரங்கள் புதிய நோட்டுகளை ஏற்கும் அடுக்குகள் இல்லாததால், பணம் இல்லாமல் செயல்பாடற்ற நிலையிலே உள்ளது.

இதனால், நாட்டில் தினமும் 12, 500 எந்திரங்களை மாற்றி அமைக்குமாறு,மத்திய அரசு வங்கிகளுக்கு உத்தரவிட்டுள்ளது. இதன்படி, நாட்டில உள்ள மொத்தம் சுமார் 2.2 லட்சம் ஏ.டி.எம்., எந்திரங்களில்,இதுவரை வெறும் 47,000 ஏ.டி.எம்., எந்திரங்கள் மட்டுமே மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இது நாட்டில உள்ள மொத்த இயந்திரங்களில்,வெறும் 25 சதவீதம் மட்டுமே. இதனால், மற்ற ஏ.டி.எம்., மையங்கள் எப்போது மாற்றி அமைக்கப்படும் என மக்கள் ஏக்கத்துடன் காத்துக்கொண்டிருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், ஏ.டி.எம்., எந்திரங்களை மாற்றி அமைக்க,போதியளவில் பணியாளர்கள் இல்லையென ஏ.டி.எம்.,களை பராமரிக்கும் நிறுவனங்கள் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது