வங்கியில் மணிக்கணக்கில் நிற்பதால் இதுவரை 55 பேர் மயங்கி விழுந்தும் , நெரிசலில் சிக்கியும் உயிரிழந்துள்ளனர். கொல்கொத்தாவில் இன்று மேலும் ஒரு முதியவர் உயிரிழந்தார். இதன் மூலம் பலி எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

இது நாட்டு மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரதமர் மோடி கடந்த வாரம், ரூபாய் 500,1000 நோட்டுகள் செல்லாது என்று திடீரென்று அறிவித்தார். இதனால், நாட்டு மக்கள் தங்களிடமுள்ள ரூபாய் நோட்டுக்களை மாற்றுவதற்காக, வங்கள் மற்றும் ஏ.டி.எம். மையங்களில் நீண்ட வரிசையில் காத்துகொண்டு இருக்கும் அவலநிலை ஏற்பட்டது.

அறிவிப்பு வெளியாகி 10 நாட்களாகியும் வங்கிகளிலும், ஏ.டி.எம்., மையங்களிலும் மக்கள் வரிசை குறையவே இல்லை. இதனால், இந்தியா முழுதும் 

இதுவரை பணம் மாற்ற சென்ற 55 பேர் உயிரிழந்துள்ளனர்.இதுகுறித்து உச்சநீதிமன்றமும் கடும் கண்டனமும் தெரிவித்ததுடன், நாட்டில் கலவரம் ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் எச்சரித்தது. இன்று நாட்டில் உள்ள அனைத்து வங்கிகளிலும், முதியவர்கள் மட்டுமே பணம் மாற்ற முடியும் என்று மத்திய அரசு அறிவித்தது.

இந்நிலையில், மேற்குவங்க மாநில தலைநகர் கொல்கத்தாவில் உள்ள மைசூர் வங்கியில், பணம் மாற்ற சென்ற முதியவர் ஒருவர், நீண்ட நேரம் வரிசையில் காத்திருந்தார்.

வெகு நேரம் நின்றிருந்ததால் உடல் நலம் பாதிப்படைந்த அந்த முதியவர் திடீரென மயங்கி விழுந்தார். இதை பார்த்த அக்கம்பக்கத்தில் கியூவில் நின்றவர்கள் அதிர்ச்சி அடைந்து அவர் முகத்தில் தண்ணீர் தெளித்து முதலுதவி செய்து எழுப்ப முயன்றனர்.

ஆனால் மயக்கம் தெளியாமலேயே உயிரிழந்தார். இது அப்பகுதியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 மோடியின் திடீர் அறிவிப்பும் அதை ஒட்டி பணத்துக்காக வங்கியின் முன்னால் மணிக்கணக்கில் மக்கள் கியூவில் காத்து கிடப்பதன் காரணமாக இதுவரை இந்தியா முழுதும் 55 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இது 56வது உயிரிழப்பாகும். இது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது.