எங்களுக்கு பணம் வேண்டாம்.. மரியாதை தான் வேண்டும் - அமைச்சர் சாந்தி தரிவாலிடம் வாக்குவாதத்தில் பெண்கள் - Video!

Rajasthan Election : ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்த நிலையில், காங்கிரஸ் அமைச்சர் சாந்தி தாரிவால் குறித்த வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகின்றது. 

Assembly Election 2023 Rajasthan Kota women oppose minister shanti dhariwal video viral in internet ans

தற்போது வெளியாகியுள்ள இந்த வீடியோவை பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் ஜெய்ஹிந்த் பகிர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஷெஹ்சாத் ஜெய் ஹிந்த் வெளியிட்ட வீடியோவில், ராஜஸ்தான் சட்டசபைக்கான தேர்தல் பிரசாரம் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், தலைவர்கள் அந்தந்த சட்டசபை தொகுதிகளில் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர். 

இந்நிலையக்ள் பாஜக தலைவரும் செய்தித் தொடர்பாளருமான ஷாஜத் ஜெய்ஹிந்த் பகிர்ந்துள்ள அந்த வீடியோவில், காங்கிரஸ் தலைவர் சாந்தி தரிவாலை கோட்டா பகுதி பெண்கள் எப்படி எதிர்க்கிறார்கள் என்பதை காணமுடிகிறது. பெண்கள் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்தது மட்டுமின்றி, காங்கிரஸ் தலைவரை புண்படுத்தும் வகையில் பேசியுள்ளனர். 

தெலங்கானா தேர்தல்: பாஜகவுக்கு கூடுதல் பலம்; மதிகா சமூகம் ஆதரவு!

மேலும் அந்த வீடியோவில் உள்ளூர் காங்கிரஸ் தலைவர் ஒருவர், அந்த பெண்களை சமாதானப்படுத்த முயன்றாலும், பெண்கள் தங்கள் எதிர் கருத்தில் பிடிவாதமாக இருந்தனர் மற்றும் சாந்தி தரிவாலை கடுமையாக எதிர்த்தனர் என்பதை அந்த வீடியோவில் தெளிவாக பார்க்கமுடிகிறது. 

கோட்டாவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பொது, ​​தரிவால் அவர்கள் அந்தப் பெண்ணுக்கு 25,000 ரூபாய் பணம் கொடுத்ததாக அந்த ட்விட்டர் பதிவில் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண் பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிட்டு, "பணம் வேண்டாம், மரியாதையும், நீதியும் வேண்டும் என்று பெண்கள் கூறினர். கற்பழிப்பை நியாயப்படுத்திய அதே நபர் தான் சாந்தி தரிவால் என்பதை உங்களுக்குச் சொல்கிறோம் என்றும் அந்த வீடியோவில் அறிவிக்கப்பட்டிருந்தது. 

ராஜஸ்தானின் கெலாட் அரசில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக உள்ள சாந்திகுமார் தரிவால் கோட்டா தொகுதியில் போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக, மாநில முதல்வர், பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். மேலும் ரோடு ஷோவும் நடத்தப்பட்டது. ஆனால் சமீபத்தில் வெளியான வீடியோவில் கோட்டாவை சேர்ந்த பெண்கள் சாந்தி தரிவாலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததை காண முடிகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios