Asianet News TamilAsianet News Tamil

உஷார்... உணவகங்களுக்கு சிக்கல்... கொரோனா தடுப்பூசி போடலயா? அப்போ ரூ.25,000 அபராதம்!!

கட்டுப்பாட்டை மீறி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் மால்கள், உணவகங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. 

assam govt announced corona restrictions
Author
Assam, First Published Jan 7, 2022, 8:25 PM IST

கட்டுப்பாட்டை மீறி தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் மால்கள், உணவகங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று அசாம் அரசு தெரிவித்துள்ளது. இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்புகள் 4 முதல் 8 லட்சம் வரை உச்சம் எட்டும் என்று ஐ.ஐ.டி. பேராசிரியர் மனீந்திர அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியாவில் கடந்த டிசம்பர் 2 ஆம் தேதி, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் முதன்முதலாக ஒமைக்ரான் தொற்று கண்டறியப்பட்டது. இதையடுத்து, விமான நிலையங்களில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும், இந்தியாவில் கொரோனா பாதிப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் 58 ஆயிரத்து 97 பேருக்கு பாதிப்பு ஏற்பட்ட நிலையில், நேற்று அதிரடியாக கிட்டத்தட்ட 90 ஆயிரத்து 92 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருந்தது.

assam govt announced corona restrictions

இந்நிலையில் நாட்டில் இன்று புதிதாக 1,17,100 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பை விட 28 சதவீதம் அதிகமாகும். இதில் மகாராஷ்டிராவில் மட்டும் 36,265 பேர் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதை அடுத்து அனைத்து மாநிலங்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில், தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களை அனுமதிக்கும் மால்கள், உணவகங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் அசாம் அரசு தெரிவித்துள்ளது. இதுக்குறித்து வெளியிட்டுள்ள அறிவிப்பில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக புதிய கட்டுப்பாடுகள் மாநிலம் முழுவதும் விதிக்கப்படுகிறது.

assam govt announced corona restrictions

இந்த கட்டுப்பாடுகள் நாளை (ஜன.8) முதல் அமலில் இருக்கும். அனைத்து மாவட்டங்களிலும் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் முன்பு இரவு 11.30 மணி முதல் காலை 6 மணி வரை என இருந்த ஊரடங்கு இனி இரவு 10 மணி முதல் காலை 6 மணிவரை நீட்டிக்கப்படுகிறது.  அத்தியாவசிய சேவைகள், அலுவலகங்களில் இரவுநேர பணிகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. மதுபானக் கூடங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், சலூன்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்க வேண்டும். மேலும், கட்டுப்பாட்டை மீறி தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்களை அனுமதிக்கும் மால்கள், உணவகங்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Follow Us:
Download App:
  • android
  • ios