Asianet News TamilAsianet News Tamil

Assam flood: வெள்ளத்தில் மிதக்கும் அசாம்.. 32 மாவட்டங்கள் நீரில் மூழ்கின - தொடரும் மீட்பு பணிகள் !

Assam flood: அசாமில் அதிகப்படியான மழை காரணமாக அந்த மாநிலத்தின் 32 மாவட்டங்கள்  வெள்ளத்தால் மிதந்து வருகின்றது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

Assam floods 7 more deaths push tally to 107 PM Modi promises all aid to fight crisis
Author
First Published Jun 24, 2022, 11:18 AM IST

அசாம் வெள்ளம்

அசாம் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழயால் மாநிலம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. அசாமில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 100க்கும் மேற்பட்டவர்கள் இருக்கலாம் என்று தகவல் வெளியாகி உள்ளது. அசாமின் 32 மாவட்டங்களில் 4 ஆயிரதிற்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.

Assam floods 7 more deaths push tally to 107 PM Modi promises all aid to fight crisis

பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ராணுவத்தினர், தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்குவதற்கு 845 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் சுமார் 2லட்சத்து 70 ஆயிரம் மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர். 

இதையும் படிங்க : Thalapathy Vijay : எங்களின் ஒற்றை தலைமையே.! அதிமுகவுக்கு டஃப் கொடுக்கும் நடிகர் விஜய் ரசிகர்கள்.!

வெள்ளத்தில் மிதக்கும் மாவட்டங்கள்

வெள்ள நிவாரணப் பொருட்கள் வழங்குவதற்கென்று 1025 வெள்ள நிவாரண பொருட்கள் வழங்கும் மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதுவரை 32 மாவட்டங்களில் சுமார் 54.5 லட்சம் மக்கள்  பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் மட்டும் 276 படகுகளின் உதவியுடன் 3,658 பேர் தேசிய பேரிடர் மீட்பு குழுவினரால் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 12 மாவட்டங்களில் 14,500 பேரை தேசிய பேரிடர் குழுவினர் மீட்டுள்ளனர். 

32 மாவட்டங்கள் மூழ்கியது

Assam floods 7 more deaths push tally to 107 PM Modi promises all aid to fight crisis

மேலும் 12 பேர் பலியாகி உள்ளனர். இதன் மூலம், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 108 ஆக அதிகரித்துள்ளது. அசாமில் உள்ள பஜாலி, பக்ஸா, பர்பேடா, பிஸ்வநாத், போங்கைகான், கச்சார், சிராங், தர்ராங், தேமாஜி, துப்ரி, திப்ருகர், திமா-ஹசாவ், கோல்பாரா, கோலாகாட், ஹைலகண்டி, ஹோஜாய், கம்ரூப், கம்ரூப் மாநகரம், கர்பி அங்லாங்ஜ்லிக், மேற்கு, கரீம்கஞ்ச்லிக் , மோரிகான், நாகோன், நல்பாரி, சிவசாகர், சோனிட்பூர், தெற்கு சல்மாரா, தமுல்பூர், தின்சுகியா போன்ற மாவட்டங்கள் கடும் சேதத்தை சந்தித்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் சிராங் மாவட்டம் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று கூறுகின்றனர். முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மாவும் ரயிலில் நாகோன்  பகுதிக்கு சென்று நிலைமையை ஆய்வு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய மற்றும் மாநில அரசுகள் முழுவீச்சில் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதையும் படிங்க : Agnipath Recruitment 2022: இன்று முதல் 'அக்னிபத்' திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.. முழு தகவல்கள் இதோ !!

Follow Us:
Download App:
  • android
  • ios