Asianet News TamilAsianet News Tamil

வாகனங்களை விற்க முடியாமல் திணறும் அசோக் லேலண்ட் ! மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவிப்பு !!

வாகன விற்பனை வீழ்ச்சி தொடர்வதன் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது.

Asok layland  will closed
Author
Delhi, First Published Sep 26, 2019, 9:53 PM IST

அசோக் லேலண்ட் நிறுவனம் இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் அமைந்துள்ள தனது வாகன உற்பத்தித் தொழிற்சாலைகளில் செப்டம்பர் மாதத்தில் எத்தனை நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுகிறது என்பது குறித்த அறிவிப்பினை இம்மாதத்தின் முதல் வாரத்தில் வெளியிட்டுள்ளது.

அதன்படி, எண்ணூரில் உள்ள அசோக் லேலண்ட் தொழிற்சாலையில் செப்டம்பர் மாதம் 16 நாட்கள் உற்பத்தி நிறுத்தப்படுவதாகவும், ஓசூர் ஆலையில் 1 & 2 பிரிவுகளில் 5 நாட்களும், ஆல்வார் மற்றும் பாந்த்ரா ஆலைகளில் 10 நாட்களும், பாண்டாநகர் ஆலையில் 18 நாட்களும் உற்பத்தி நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Asok layland  will closed

ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஆகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது என்பது குறிப்பிடத்தக்களது.

இந்நிலையில் தொடரும் வாகன விற்பனை வீழ்ச்சியின் காரணமாக அசோக் லேலண்ட் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு மேலும் 5 நாட்களை வேலையில்லா நாட்களாக அறிவித்துள்ளது.

அதன்படி  செப்டம்பர் 28, 30, அக்டோபர் 1, 8 மற்றும் 9 ஆகிய ஐந்து தேதிகள் வேலையில்லா நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அறிவிக்கப்பட்டுள்ள வேலையில்லா நாட்களில் ஊழியர்களுக்கு வழங்கும் ஊதியம் குறித்து ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என்று நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios