Exclusive | ஐஐடி கான்பூர் நாட்டின் முதல் கார்பன் நியூட்ரல் வளமாக இருக்கும்! - இயக்குனர் அபய் கரன்திகர்!
உலகளிவிலும், இந்திய அளவிலும் முதல் கார்பன் நியூட்ரல் கேம்பஸ் இன்ஸ்டிடியூட் என்ற பெருமையை ஐஐடி கான்பூர் பெறும் என அதன் இயக்குனரும், பேராசிரியருமான அபய் கரன்திகர் தெரிவித்துள்ளார்.
ஏசியாநெட் நியூஸ்-ன் 'டயலாக்' நிகழ்சி, சமூகம் மற்றும் நாட்டிற்காக பங்காற்றிய ஆளுமைகளை வெளிஉலகத்திற்கு அடையாளம் காட்டுகிறது. இம்முறை ஐஐடி கான்பூரின் இயக்குனரும், பேராசிரியருமான அபய் கரன்திகர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
கார்பன் நியூட்ரல் கேம்பசாக மாற்றும் முயற்சிக்காக, ஐஐடியில் உள்ள சந்திரகாந்தா கேசவன் எரிசக்தி கொள்கை மற்றும் காலநிலை தீர்வு மையத்தின் நிபுணர்களும் இந்தப் பணியில் ஒத்துழைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பம் குறித்து பேசுகையில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட 5ஜி தொழில்நுட்பத்தை விரைவில் மக்கள் பயன்படுத்த முடியும் என்றார். அவர்கள் தங்கள் ஸ்மார்ட்போனில் சிறந்த நெட்வொர்க்கைப் பெற முடியும்.
இப்போது இந்த 5G தொழில்நுட்பத்தை டாடா குழுமத்துடன் உரிமம் கிடைக்கப்பெற்றது. 5G டெஸ்ட்பெட் தொழில்நுட்பம் முழுமையாக தயாராக உள்ள இடத்தில் உயிரினங்களுக்கு செயற்கை இதயம் பொருத்தல் போன்ற பரிசோதனைகள் சாத்தியமாகும். பல்வேறு, வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகே இது பொது மக்களுக்குக் கிடைக்கும் என்றும் தெரிவித்தார்.
NIRF தரவரிசை குறித்து பேசி அவர், முன்பு துறையின் பெயர் தொழில்துறை மேலாண்மை மற்றும் பொறியியல் என்று இருந்தது. அப்போது, தொழில் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. இப்போது துறையின் பெயர், மேலாண்மை மற்றும் அறிவியல் துறை என்று இருக்கும். இதில் எம்பிஏ படிப்புகளுக்கு அதிக கவனம் செலுத்தப்படும்.
இவைகளைத் தவிர, ஐஐடி கான்பூர் உத்தரபிரதேச மாநில. அரசுடன் இணையவழி பாதுகாப்பு முறைகளை மேற்கொண்டு வருகிறது. AI செயற்கை நுண்ணறிவு மையம் மற்றும் அக்ரிடெக் ஆகிய துறைகளில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. விரைவில் அதன் சிறந்த முடிவுகள் அனைவரின் பார்வைக்கும் வரும் என பேராசிரியர் அபய் கரன்திகர் தெரிவித்தார்.