எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குழைக்கும் நடவடிக்கைகளில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளா

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் ஒற்றுமைக்காக அல்ல, மாறாக அதை நாசமாக்குவதற்கும், பாஜகவுக்கு ஆதரவளிப்பதற்குமான திட்டமிடப்பட்ட நடவடிக்கை என காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் விமர்சித்துள்ளார்.

டெல்லி அரசு அதிகாரங்களை கட்டுப்படுத்தும் அவசர சட்டத்தை மத்திய அரசு இயற்றியுள்ளது. இந்த சட்டத்தின்படி துணை நிலை ஆளுநருக்கு பரவலான அதிகாரம் இருக்கும் என தெரிகிறது. டெல்லியில் அதிகார மையத்தை தங்களது கட்டுக்குள் கொண்டு வரும் வகையிலான இந்த மசோதாவை ஆம் ஆத்மி கட்சி கடுமையாக எதிர்த்து வருகிறது.

இதற்காக எதிர்க்கட்சித் தலைவர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் சந்தித்து மசோதவை எதிர்க்குமாறு கோரிக்கை விடுத்து வருகிறார். பெரும்பாலான எதிர்கட்சிகள் அவருக்கு ஒத்துழைப்பு தருவதாக உறுதி அளித்து நிலையில், இந்த மசோதா மீதான எதிர்ப்பை காங்கிரஸ் கட்சி இன்னும் வெளிப்படையாக அறிவிக்கவில்லை. இதனால், இரு கட்சிகளுக்கும் இடையே மோதல் நீடித்து வருகிறது.

இதனிடையே, பாட்னவில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால், செய்தியாளர்கள் சந்திப்பை புறக்கணித்தார். மேலும், “டெல்லி அவசரச் சட்டத்தை எதிர்ப்பதாக அறிவிக்கும் வரை, காங்கிரஸ் பங்கேற்கும் ஒத்த எண்ணம் கொண்ட கட்சிகளின் எதிர்காலக் கூட்டங்களில் ஆம் ஆத்மி கட்சி பங்கேற்பது கடினம்.” என ஆம் ஆத்மி தெரிவித்துள்ளது.

அதேசமயம், காங்கிரஸ் - ஆம் ஆத்மி அகிய இரு கட்சிகளுக்கும் இடையே வார்த்தை போர் முற்றியுள்ளது. இரு கட்சியினரும் ஒருவரையொருவர் மாறிமாறி விமர்சித்து வருகின்றனர். இந்த நிலையில், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை குழைக்கும் நடவடிக்கைகளில் அரவிந்த் கெஜ்ரிவால் ஈடுபடுவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கு எகிப்து அரசின் உயரிய விருது: இதுவரை மோடி பெற்ற அரச விருதுகளின் பட்டியல்!

இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “டெல்லி அவசரச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் உதவியை அரவிந்த் கெஜ்ரிவால் நாடினாலும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களை கேலி செய்து வருகிறார். அவரது அமைச்சர்கள் எங்கள் கூட்டணிக்கு முன்நிபந்தனைகளை வைக்கிறார்கள், அதே நேரத்தில் அவர்களின் தலைமை செய்தித் தொடர்பாளர் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டத்தின்போது, எங்கள் கட்சியையும் தலைவர்களையும் பகிரங்கமாக இழிவுபடுத்துகிறார். கடுமையாக விமர்சித்து விட்டு பின்னர் ஆதரவு கோருவது எந்த வகையான கூட்டணி?” என கேள்வி எழுப்பியுள்ளார்.

Scroll to load tweet…

மேலும், “அரவிந்த் கெஜ்ரிவாலின் சமீபத்திய அரசியல் சூழ்ச்சிகள் பலரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளன. இருப்பினும், உண்மையை தெளிவுபடுத்த விரும்புகிறேன். ஊழல் குற்றச்சாட்டில் சிறை தண்டனையை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் அவர் ஈடுபட்டுள்ளார். சகாக்கள் இருவர் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதுவே கெஜ்ரிவாலின் இத்தகைய நடவடிக்கைகளுக்கு காரணம். எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைக்கான அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் ஒற்றுமைக்காக அல்ல, மாறாக அதை நாசமாக்குவதற்கும், பாஜகவுக்கு ஆதரவளிப்பதற்குமான திட்டமிடப்பட்ட நடவடிக்கை.

ஆம் ஆத்மி கட்சியின் கடந்தகால நடவடிக்கைகள், பாராளுமன்றத்திலோ, டெல்லி சட்டமன்றத்திலோ அல்லது பிற இடங்களிலோ பாஜகவுடனான அவர்களது ரகசிய கூட்டணியை வலுப்படுத்துகின்றன. கெஜ்ரிவாலின் துரோகங்கள் இழிவானவை; பிரசாந்த் பூஷன், யோகேந்திர யாதவ் மற்றும் அண்ணா ஹசாரே இயக்கத்தை நிறுவியவர்களிடம் அவரை பற்றி கேட்டுப்பாருங்கள்.

இருப்பினும், அரவிந்த் கெஜ்ரிவாலின் நடவடிக்கைகள் கவனிக்கப்படாமல் இல்லை. நீங்கள் செய்த மாபெரும் ஊழல், முறைகேடாக நிதியை உபயோகப்படுத்தியது மற்றும் கோவா, குஜராத், பஞ்சாப், ஹிமாச்சல், உத்தரகண்ட், அஸ்ஸாம் ஆகிய மாநிலங்களில் காங்கிரஸை ஒழித்துக்கட்ட பாஜகவுக்கு உதவுவதற்கான உங்களது நடவடிக்கைகள் மறக்கமுடியாதவை. ஆம் ஆத்மி அல்லது சாதாரண மனிதர் என்ற போர்வையில் நீங்கள், 171 கோடி ரூபாய் பொதுப் பணத்தைப் பயன்படுத்தி, உங்களுக்காக ஒரு அரண்மனையைக் கட்டியெழுப்பி டெல்லியின் குடிமக்களை ஏமாற்றியுள்ளீர்கள். 

உங்கள் செயல்கள் கசப்பான உண்மைகள் வெளிவந்து விட்டன. நீங்கள் இனி ஊழலுக்கு எதிரான போராட்ட வீரரோ அல்ல. மாறாக, நீங்கள் ஊழலில் சிக்கி நிற்கிறீர்கள். உங்கள் 'ஷீஷ் மஹாலில்' ஒரு ராஜாவைப் போல ஆடம்பரமான வாழ்க்கை முறையை வாழ்கிறீர்கள்.” என்று அஜய் மக்கான் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாக பதிவிட்டுள்ளார்.