அருணாச்சலபிரதேசத்தில் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ. திரோங் அபோ உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று வந்த மக்களவை தேர்தல் முடிவடைந்து நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. இந்நிலையில் அருணாச்சலபிரதேசத்தில் இன்று தீவிரவாதிகள் திடீரென தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். இதில் என்.பி.பி. கட்சி எம்.எல்.ஏ. திரோங் அபோ உட்பட 7 பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த தாக்குதல் என்.எஸ்.சி.என்.  தீவிரவாத குழுவினர் இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர். 

இந்த தாக்குதல் சம்பவத்துக்கு மேகாலயா மாநில முதல்வர் கன்ராட் சங்மா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அத்துடன் இது தொடர்பாக பிரதமர் மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். அருணாசலப்பிரதேசத்தில் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மேற்கு கோன்சா பகுதியில் போட்டியிட்டவர் திரோங் அபோ என்பதும், 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.