Asianet News TamilAsianet News Tamil

புது ரூ.2000 நோட்டுக்கு தடையா? - அருண் ஜெட்லி பரபரப்பு தகவல்கள்

arun jeitley talks about new currency
arun jeitley-talks-about-new-currency
Author
First Published Mar 17, 2017, 4:28 PM IST


புதிதாக வெளியிடப்பட்ட 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெரும் திட்டம் எதுவும் இல்லை என, மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி உறுதியாக அறிவித்தார்.

2 ஆயிரம் ரூபாய்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து அந்த ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டன.

arun jeitley-talks-about-new-currency

அதன்பிறகு புதிய 500 மற்றும் 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகள் அச்சிட்டு வெளியிடப்பட்டன. புதிதாக வெளியிடப்பட்ட இந்த நோட்டுகளும் செல்லாது என அறிவிப்பு வெளியாகலாம் என பேசப்பட்டது.

வாபஸ் இல்லை

இந்த நிலையில், நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் நிதி அமைச்சர் அருண் ஜெட்லி புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வாபஸ் பெறும் திட்டம் இல்லை என அறிவித்தார்.

arun jeitley-talks-about-new-currency

ரூ.12 லட்சம் கோடி

ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டபின் ரிசர்வ் வங்கியிடம் திருப்பி ஒப்படைக்கப்பட்ட 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு (2016 டிசம்பர் 10-ந்தேதி வரை) ரூ.12.44 லட்சம் கோடியாகும்.

இதில் கள்ள நோட்டுகளை கண்டறிந்து அகற்றும் பணி முடிவடைந்தபின்தான் இந்த பணத்தின் உண்மையான மொத்த மதிப்பு விவரம் தெரிய வரும். 2017 மார்ச் 3-ந்தேதி நிலவரப்படி நாட்டில் புழக்கத்தில் உள்ள மொத்த பணத்தின் மதிப்பு ரூ.12 லட்சம் கோடியாகும்.

arun jeitley-talks-about-new-currency

கடந்த ஜனவரி 27-ந்தேதி, இந்தத் தொகை ரூ.9.921 கோடியாக இருந்தது.

வட்டி குறைப்பு

மத்திய அரசின் இந்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையின் மூலம் வங்கிகளில் சேமிப்பு உயர்ந்துள்ளது. இதன் மூலம் வட்டி விகிதம் குறைக்கப்பட்டு வங்கிகள் கடன் வழங்குவது அதிகரிக்க வழி வகுக்கும்’’.

இவ்வாறு அவர் கூறி இருக்கிறார்.

Follow Us:
Download App:
  • android
  • ios