arun jaitley slams congress
கடந்த ஆண்டு நவம்பர் 8-ம் தேதி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கையை ஆரம்பம் முதலே காங்கிரஸ் உள்ளிட்ட பெரும்பாலான எதிர்க்கட்சிகள் எதிர்த்துவருகின்றன. பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
பணமதிப்பு நீக்க நடவடிக்கை, ஜிஎஸ்டி வரிவிதிப்பு ஆகியவற்றால் இந்திய பொருளாதாரம் பின்னடைவை சந்தித்துள்ளதாகவும் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன.
பண மதிப்பு நீக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட நவம்பர் 8-ம் தேதியை கறுப்பு தினமாக கொண்டாட உள்ளதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், கறுப்பு பணத்தை ஒழிக்க எந்தவிதமான நடவடிக்கையையும் காங்கிரஸ் கட்சி எடுக்கவில்லை எனவும் பணமதிப்பு நீக்க நடவடிக்கையின் முக்கியத்துவத்தை காங்கிரஸ் கட்சி புரிந்துகொள்ளவில்லை எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
கறுப்புப் பணத்தை ஒழிக்க காங்கிரஸ் கட்சி எந்த நடவடிக்கையும் எடுக்காததால் நவம்பர் 8-ம் தேதியை கறுப்புப் பணம் எதிர்ப்பு தினமாக பாஜக நாடு முழுவதும் கொண்டாட உள்ளதாக ஜேட்லி தெரிவித்துள்ளார்.
நிதியமைச்சர் ஜேட்லியின் அறிவிப்பு காங்கிரஸார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
