பிரபல பத்திரிகையாளரும், ஆங்கில செய்திச் சேனல் ‘டைம்ஸ் நவ்’வில் தலைமை செய்தி ஆசிரியராக இருந்த அர்னாப் கோஸ்வாமி ‘ரிபப்ளிக்’(Republic) என்ற சேனலை விரைவில் தொடங்க உள்ளார்.
கேரள மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைத்தலைவரும், பாரதியஜனதா கட்சியின் எம்.பி.யுமான ராஜீவ் சந்திரசேகருடன் இணைந்து இந்த சேனலை அர்னாப் கோஸ்வாமி தொடங்க உள்ளார்.
‘டைம்ஸ் ஆப் இந்தியா’ பத்திரிகை குழுமத்தில் இருந்து ஒளிபரப்பாகும் ‘டைம்ஸ் நவ்’ செய்தி சேனலில் நீண்டகாலமாக தலைமை செய்தி ஆசிரியராக இருந்தவர் அர்னாப்கோஸ்வாமி. இந்திய அளவில் புகழ்பெற்ற பத்திரிகையாளராகவும், செய்தி தொகுப்பாளராகவும், ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றியவர்.
இந்நிலையில், அந்த நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் வெளியேறிய அர்ணாப் கோஸ்வாமி, கேரள மாநில தேசிய ஜனநாயகக் கூட்டணியின் துணைத்தலைவரும், பாரதியஜனதா கட்சியின் எம்.பி.யுமான ராஜீவ் சந்திரசேகருடன் இணைந்து புதிய சேனல் ஒன்றை தொடங்க உள்ளார்.
இதற்காக கடந்த நவம்பர் 19-ந்தேதி ஏ.ஆர்.ஜி. அவுட்லையர் மீடியா பிரைவட் லிமிடட் எனும் நிறுவனத்தையும் அர்ணாப் கோஸ்வாமி தொடங்கியுள்ளார். இந்த நிறுவனத்தில் இருந்து ‘ரிபப்ளிக்’ சேனல் வெளிவர உள்ளது.
பாரதிய ஜனதா எம்.பி.யான ராஜீவ் சந்திரசேகர் இந்த நிறுவனத்தில் ஏறக்குறைய ரூ. 30 கோடியை முதலீடு செய்துள்ளார். ராஜீவ் சந்திரசேகருக்கு கேரள மாநிலத்தின் ‘ஏசியாநெட்’ சேனலில் பங்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ராஜீவ் சந்திரசேகர் தவிர்த்து, சார்க்(SARG)மீடியா ஹோல்டிங் என்ற நிறுவனமும் புதிய சேனலில் முதலீடு செய்ய உள்ளது.
இந்த சார்க் என்ற நிறுவனத்தில் அர்னால் கோஸ்வாமியும், அவரின் அர்னாப்கோஸ்வாமியின் மனைவி சமயபிரதா ராயும் இயக்குநர்களாக உள்ளனர். இவர்கள் தவித்து மேலும் 14 முதலீட்டாளர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிறுவனம் ஏ.ஆர்.ஜி. அவுட்லையர் நிறுவனத்தில் ஏறக்குறைய ரூ. 26 கோடியை முதலீடு செய்ய உள்ளது
Read Exclusive COVID-19 Coronavirus News updates, at Asianet News Tamil.
மெய்நிகர் போட் ரேசிங் கேம் ஆடுங்கள் மற்றும் சவாலுக்கு உட்படுத்தி கொள்ளுங்கள். கிளிக் செய்து விளையாடுங்கள்
Last Updated Sep 19, 2018, 2:58 AM IST