Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் டார்கெட் தென்னிந்தியா! சிறுகுடா பகுதியில் மிதந்து வந்த படகுகள்... ராணுவம் எச்சரிகை!

சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் படகுகள் 2 கிடைத்துள்ளதால் தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ராணுவம் எச்சரித்துள்ளது.
 

Army Warns Of Possible Terror Attacks In South India
Author
Chennai, First Published Sep 9, 2019, 5:38 PM IST

சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட பாகிஸ்தான் படகுகள் 2 கிடைத்துள்ளதால் தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என ராணுவம் எச்சரித்துள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல்பகுதியில் மண்டபம் அருகே உள்ள மனோலிபுட்டி தீவில் மர்மமான முறையில் பிளாஸ்டிக் படகு ஒன்று நிறுத்தப்பட்டிருப்பதை அந்த வழியாக நாட்டுப்படகில், கடந்த மாதம் மீன் பிடிக்க சென்ற மீனவர்கள் கவனித்து, கடலோர போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து மண்டபம் கடலோர போலீசார் மண்டபம் தெற்கு துறைமுக பகுதியில் இருந்து ஒரு மீன்பிடி படகு மூலம் மனோலிபுட்டி தீவுக்கு விரைந்து சென்றனர். அங்கு தீவை ஒட்டிய கடல் பகுதியில் பிளாஸ்டிக் படகு ஒன்று நின்று கொண்டிருந்தது. அப்போது இறங்கி கடலோர போலீசார் சோதனையிட்டனர். மீன் பிடிக்க தேவையான எந்தவொரு பொருட்களும் இல்லை என தெரியவந்தது.

இதையடுத்து தீவு பகுதிகளில் மர்ம நபர்கள் நடமாட்டம் உள்ளதா? யாரும் பதுங்கி உள்ளனரா? என்று கடலோர போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினார்கள். ஆனால் தீவு பகுதியிலோ யாரும் இல்லாததால் பிளாஸ்டிக் படகை மீன் பிடி படகு மூலம் கயிறு கட்டி மண்டபம் பகுதிக்கு இழுத்துச் சென்று சுங்கத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இதே போல, குஜராத் மாநில கடல்பகுதியில் உள்ள சர் கிரீக் என்ற சிறுகுடாவில் சமீபத்தில் பாகிஸ்தானின் சேர்ந்த இரு இயந்திரப் படகுகள் அனாதையாக மிதந்தன.

இந்நிலையில், தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என இந்திய ராணுவத்தின்  தென்னிந்தியா பிரிவுக்கான தளபதி லெப்டினண்ட் ஜெனரல் எஸ்.கே.சைனி இன்று எச்சரித்துள்ளார்.’சமீபத்தில் சர் கிரீக் சிறுகுடா பகுதியில் கைவிடப்பட்ட இரண்டு படகுகள் கிடைத்துள்ளன. தென்னிந்தியாவில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தலாம் என எங்களுக்கு உளவுத்துறை மூலாம் தகவல் கிடைத்துள்ளது. இதை முன் எச்சரிக்கையுடன் உறுதிப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம் என கூறியுள்ளார்.

Follow Us:
Download App:
  • android
  • ios