army man saved girl from theives
40 ரெயில் கொள்ளையர்கள் 18 வயது பெண்ணை அவர்களின் பெற்றோர்களின் முன்பே பலாத்காரம்செய்ய முயன்றபோது, அதை தனி ஆளாக தடுத்த ராணுவ வீரர் கொள்ளையர்களில் 3 பேரை அடித்துக்கொன்றார். மற்றவர்கள் உயிரைக்காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடினர்.
இந்த வீரச் செயலலில் ஈடுபட்ட ராணுவ வீரர் ஓய்வுபெற்றவர் என்றபோதிலும், ராணுவம் இப்போது அவருக்கு விருது வழங்கி பாராட்டியுள்ளது. இந்த சம்பவம் நடந்து ஏறக்குறைய 10 ஆண்டுகள் ஆகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
பிஷ்னு சிரேஸ்தா ராணுவத்தின் கூர்கா படைவீரர். ராணுவத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றியபின் ஓய்வுபெற்றார். அதன்பின் தனது சொந்த ஊரான மேற்குவங்காள மாநிலம் கூர்காபூருக்கு ராஞ்சியில் இருந்து மவுரியா எக்ஸ்பிரஸ் ரெயிலில் புறப்பட்டார்.

ரெயில் மேற்குவங்காளத்தின் அடர்ந்த காட்டுப்பகுதிக்குள் சென்று கொண்டு இருந்த போது திடீரென ரெயில் நிறுத்தப்பட்டது.
பயணிகள் அனைவரும் ஏன், எதற்காக நிறுத்தப்பட்டது என்று தெரியவதற்குள், பிஷ்னு சிரேஸ்தா இருந்த பெட்டிக்குள் பயங்கரஆயுதங்களுடன் 40 கொள்ளையர்கள் புகுந்தனர். பயணிகளிடம் இருந்த நகைகள்,பணம், உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்கள் அனைத்தையும் கொள்ளையடித்தனர்.
தூங்கிக்கொண்டுஇருந்த பிஷ்னு சிரேஸ்தாவையும் எழுப்பி,அவரிடம் இருந்த நகை,பணத்தையும் கேட்டு மிரட்டினர். அவர் தான் ஒரு ஓய்வு பெற்றராணுவ வீரர் என்ற கூறிய நிலையிலும் கொள்ளையர்கள் கத்தியை வைத்து மிரட்டியதால் , வேறுவழியின்றி பிஷ்னு அனைத்தையும் கொடுத்தார்.இந்நிலையில், பொறுமையாக இருந்த பிஷ்னு கொள்ளையர்கள என்ன செய்யப்போகிறார்கள் என்று காத்திருந்தார்.
அப்போது கொள்ளையர்களின் கவனம் முழுவதும் அந்தபெட்டியில் இருந்த 18 வயது பெண்ணின் மீது திரும்பியது. அந்த பெண்ணை இழுத்துவந்து அவர்களின் பெற்றோர்களின் முன்பே 40 பேரும் பலாத்காரம்செய்ய முயன்றனர். இதை பார்த்துப் பொறுமை இழந்த, பிஷ்னு 40 பேரையும் தாக்கத் தொடங்கினர்.
தன்னிடம் இருக்கும் கூர்க்கா படையினருக்கான கத்திகளை வைத்து, அந்த பெண்ணுக்கு கேடயமாக இருந்து பிஷ்னு காத்தார். அந்த கொள்ளையர்களை அந்த பெண்ணின் அருகே கூட நெருங்க விடாமல், அனைவரையும் வெளுத்து வாங்கினார். இதில் கத்திக்குத்து பட்ட 3 கொள்ளையர்கள் சம்பவ இடத்திலேயே இறந்தனர், 8 பேர்படுகாயமடைந்தனர்.
ஆனால், அடுத்த ரெயில் நிலையம் வருவதற்குள் கொள்ளையர்கள் அனைவரும் தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் பிஷ்னு சிரேஸ்தாவுக்கும் கையில் பலமான காயம் ஏற்பட்டது.
அடுத்த ரெயில் நிலையத்தில் தயாராக காத்திருந்த ரெயில்வே போலீசார், பிஷ்னுவை உடனடியாக மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுசென்றனர். 2 மாதசிகிச்சைக்கு பின், பிஷ்னுவுக்கு கையில் ஏற்பட்ட காயம் முழுமையாக குணமடைந்தது.
18 வயது பெண்ணின் மானத்தை காப்பாற்றியதற்கு பெண்ணின் பெற்றோர்கள் மிகப்பெரிய பரிசுத்தொகையை பிஷ்னுவுக்கு வழங்கினர். ஆனால்,அதை ஏற்க மறுத்த பிஷ்னு, “ போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து போரிடுவது ராணுவவீரரான எனது கடமை. அதுபோல், ெரயிலில் ஒரு பெண்ணின் மானத்தை காப்பாற்றுவது என்பது, ஒரு மனிதரின் கடமை அதைத்தான் செய்தேன் பணம் வேண்டாம்” என்று கூறிவிட்டார்.
இதையடுத்து, இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்த ராணுவம் வீர தீர செயலுக்கான “சவுரியா சக்கரா”, ரக்சாக் பதக்கம், ரூ.50 ஆயிரம் ரொக்கப்பரிசு ஆகியவற்றை வழங்கி கவுரவித்துள்ளது.
