ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பிராந்திய ராணுவ வீரரின் உடல் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் செவ்வாய்க்கிழமை பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட பிராந்திய ராணுவ வீரரின் உடல் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளது. நேற்று முதல் இந்த வீரர் காணாமல் போனதாக தகவல் வெளியான நிலையில், பாதுகாப்புப் படையினர் அப்பகுதியில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கோகர்நாக் வனப்பகுதியில் இருந்து இந்திய ராணுவத்தின் டிஏ வீரரின் உடல் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் மீட்கப்பட்டது. அனந்த்நாக்கின் முக்தாம்போரா நவ்காமின் ஹிலால் அகமது பட் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

Scroll to load tweet…

அறிக்கைகளின்படி, அக்டோபர் 8 ஆம் தேதி தொடங்கப்பட்ட பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, ​​பிராந்திய ராணுவத்தின் 161வது பிரிவைச் சேர்ந்த இரண்டு வீரர்கள் அனந்த்நாகில் உள்ள வனப்பகுதியில் இருந்து கடத்தப்பட்டனர். ஆனால், அவர்களில் ஒருவர் இரண்டு குண்டு காயங்களுக்குப் பிறகும் தப்பித்து வந்துவிட்டார்.

காயமடைந்த வீரர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது நிலைமை சீராக உள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். காணாமல் போன வீரரைத் தேடும் பணி அப்பகுதியில் தொடங்கியது. அக்டோபர் 5 ஆம் தேதி ஜம்மு காஷ்மீரின் குப்வாராவில் கட்டுப்பாட்டு கோரேகையில் (எல்ஓசி) பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக பிடிஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

Scroll to load tweet…

இந்த ஆண்டு தொடக்கத்தில் ஆகஸ்ட் மாதம் அனந்த்நாகில் பாதுகாப்புப் படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே நடந்த மோதலில் இரண்டு வீரர்கள் கொல்லப்பட்டனர், மேலும் மூன்று பேர் காயமடைந்தனர். இதற்கு முன்னதாக, டோடா மாவட்டத்தில் கனரக ஆயுதம் ஏற்றிய பயங்கரவாதிகளுடன் நடந்த மோதலில் நான்கு ராணுவ வீரர்களும் ஒரு காவல் அதிகாரியும் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முகமது (ஜேஇஎம்) பயங்கரவாத அமைப்பான 'காஷ்மீர் புலிகள்' இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது.