தாக்குதல் நடத்த தயார்..! அரசு "ம்ம்.." சொன்னால் போதும் ..! அதிரடி காட்டும் தளபதி நரவானே..!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தாக்குதல் நடத்த தயாராக உள்ளதாக புதிய தலைமை தளபதி எம்.எம். தளபதி நரவானே தெரிவித்து உள்ளார் 

சமீபத்தில் இவர் அளித்த பேட்டி ஒன்றில் கேட்கப்பட்ட கேள்விக்கு இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார். அதாவது எல்லையில் ஆக்கிரமிப்பு நடைபெறாமல் இருக்க தடுப்பது பொருட்டும், ஊடுருவல் தடுப்பது பொருட்டும் இந்திய ராணுவம் கவனமாக கண்காணித்து வருகிறது

இந்த நிலையில் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்துமா என்ற கேள்விக்கு பதில் அளித்த அவர் அரசு கேட்டுக்கொண்டால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஸ்மீர் நிலையம் மீது தாக்குதல் நடத்த தயார் என அதிரடியாக தெரிவித்தார்.

ராணுவத்திடம் ஏராளமான பல திட்டங்கள் இருப்பதாகவும் அரசு கேட்டுக் கொண்டால் அவை அனைத்தும் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவித்து இருந்தார். இவர் ஏற்கனவே ராணுவ தலைமை தளபதியாக பதவி ஏற்ற உடன் அளித்த பேட்டியிலும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கர வாதிகளின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த இந்திய ராணுவத்திற்கு உரிமை உள்ளது என அதிரடியாக தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி ஒரு நிலையில் அரசு "ம்ம்.." சொன்னால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு பகுதி மீது தாக்குதல் நடத்த தயார் என தெரிவித்துள்ளார்