Indian Air Force Day: 2023ம் ஆண்டிலிருந்து விமானப் படையில் ‘மகளிர் அக்னீவர்கள்’:ஏர் சீப் மார்ஷல் சவுத்ரி அறிவி
2023ம் ஆண்டிலிருந்து விமானப் படையில் பெண் அக்னீவர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்று விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுத்ரி தெரிவித்தார்
2023ம் ஆண்டிலிருந்து விமானப் படையில் பெண் அக்னீவர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம் என்று விமானப்படைத் தளபதி ஏர் சீப் மார்ஷல் விஆர் சவுத்ரி தெரிவித்தார்
விமானப்படையின் 90வது ஆண்டுவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. முதல்முறையாக டெல்லிக்கு வெளியே சண்டிகரில் இந்த நிகழ்ச்சி நடந்தது. விமானப்படையில் உள்ள ஏறக்குறைய 80க்கும் மேற்பட்ட விமானங்கள் சாகசத்தில் ஈடுபட்டன. விமானப்படைக்கு புதிதாக சீருடையும் இன்று அறிமுகப்படுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் பங்கேற்றனர். விமானப்படைத் தலைவரும், சிறப்பு அழைப்பாளருமான ஏர் சீப் மார்ஷல் வி.ஆர். சவுத்ரி விமானப்படையின் அணிவகுப்பை பார்வையிட்டார்
இந்திய விமானப்படைக்கு புதிய சீருடை… எப்படி இருக்கும்? விவரம் உள்ளே!!
இந்த நிகழ்சிசியில் ஏர் சீப் மார்ஷெல் வி.ஆர் சவுத்ரி பேசியதாவது:
வரலாற்று சிறப்பு மிக்க இந்த விழாவில் பெருமைக்குரிய ஒரு அறிவிப்பை வெளியிடுகிறேன். விமானப்படை அதிகாரிகளுக்காக சிறப்பு வெப்பன் சிஸ்டம் அதாவது அனைத்து ஆயுதங்களையும் ஒருங்கிணைத்து செயல்படுத்தும் கிளையை உருவாக்க மத்தியஅரசு ஒப்புதல் அளித்துள்ளது. சுதந்திரத்துக்குப்பின் முதல்முறையாக இதுபோன்று ஆயுதங்கள் ஒருங்கிணைப்பு மையம் செயல்பட உள்ளது.
தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகள், தரையிலிருந்து வான் இலக்குகளை தாக்குதல், ட்ரோன்கள் இயக்கம் உள்ளிட்டவற்றை கட்டுப்படுத்தும் இடமாக இருக்கும். இதன் மூலம் விமானிகளுக்கு விமானப்பயிற்சி அளிக்கும் செலவில் ரூ.3400 கோடி அரசுக்கு மிச்சமாகும்.
இந்திய விமானப்படையின் மைல்கல் ‘பிரசாந்த் ஹெலிகாப்டர்’: மேக் இன் இந்தியாவின் அம்சம்
2023ம் ஆண்டிலிருந்து விமானப்படையில் பெண் அக்னீவர்களைச் சேர்க்கத் திட்டமிட்டுள்ளோம். அதற்கான கட்டுமானம் உருவாக்கப்பட்டு வருகிறது, விரைவில் அனைத்தும் இறுதி செய்யப்படும்.
இந்த ஆண்டை இந்திய விமானப்படை ஆத்மநிர்பாரதா அல்லது உள்நாட்டு மயமாக்கலாகப் பார்க்கிறது. இந்திய விமானப்படையில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட பல கருவிகள் சேர்க்கப்பட உள்ளன. புதிதாக இலகுரக தாக்குதல் பிரசாந்த் ஹெலிகாப்டர்கள் சேர்க்கப்பட்டன.
அதுமட்டுமல்லாமல் தேஜாஸ், அருத்ரா, அஸ்லீசா ராடார், வானத்தில் இருந்தபடியே இலக்கைத் தாக்கி அழிக்கும் அஸ்த்ரா, ஆகாஷ் ஏவுகணை, அட்வான்ஸ்டு லைக் ஹெலிகாப்டர்கள், ஒருங்கிணைக்கப்பட்ட ஏர் கமாண்ட் மற்றும் ஏர் கன்ட்ரோல் ஆகியவை உள்நாட்டுத் தயாரிப்பாகும்” எனத் தெரிவித்தார்.
இந்திய விமானப்படையின் தரமான சம்பவங்கள்.. சுவாரஸ்ய தகவல்கள் இதோ..
சுக்னா லேக் பகுதியில் பிற்பகலில் நடக்கும் விமான அணிவகுப்பில் பிரசாந்த் ஹெலிகாப்டர்கள், ஏஎல்ஹெச் எம்கே4 ரக ஹெலிகாப்டர்கள், எல்சிஏ விமானங்கள், தேஜாஸ், சுகோய், மிக்29, ஜாக்குவார், ரஃபேல், ஐஎல்-76, சி-130ஜே, ஹகா ஆகிய விமானங்களும் அணிவகுப்பில் ஈடுபடுகின்றன. இது தவிர ஹெலிகாப்டர்களான துருவ் ஹெலிகாப்டர், சினூக், அப்பாச்சி, எம்ஐ-17 ஆகியவையும் அணிவகுப்பில் பங்கேற்கின்றன