பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு மன்னிப்பு கேட்டுள்ளார். 

ரஃபேல் ஒப்பந்தத்தில் எவ்வித முறைகேடும் நடந்ததற்கு ஆதாரம் இல்லை என உச்சநீதிமன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்து இருந்த நிலையில், இந்த ஒப்பந்தம் தொடர்பான சில முக்கிய ஆவணங்கள் ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. எனவே அவற்றை ஆதாரமாக கொண்டு  உச்சநீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

இவற்றை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், புதிய ஆவணங்கள் அடிப்படையில் ரஃபேல் ஒப்பந்தம் குறித்து விசாரணை நடத்தப்படும் என கடந்த 10–ம் தேதி உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு மத்திய அரசுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.  இதனை சுட்டிக்காட்டிய ராகுல், காவலாளியே திருடன் என்பதை உச்சநீதிமன்றம் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறினார். இந்நிலையில் ரபேல் குறித்த உத்தரவில் பிரதமர் மோடியை பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி எதுவுமே கூறாத நிலையில், அவர் பேச்சை ராகுல்காந்தி திரித்து கூறியுள்ளார். மேலும் ராகுலின் இந்த பேச்சு உச்சநீதிமன்ற தீர்ப்பை விமர்சனம் செய்வது போல் உள்ளதாக கூறி பாஜக-வை சேர்ந்த மீனாட்சி லேக்கி நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

 

அப்போது நீதிமன்ற உத்தரவு குறித்து பேசியதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி வருத்தம் தெரிவித்திருந்தார். எனினும் அவருக்கு இவ்விவகாரத்தில் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பிய நீதிபதிகள் தன் பேச்சு குறித்து ராகுல் காந்தி மீண்டும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்த ராகுல், உச்ச நீதிமன்றத்தை சுட்டிக்காட்டி மோடியை தவறாக பேசியதற்காக மீண்டும் வருத்தம் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில், இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. ராகுல் காந்தியின் பதில் மனுவை நிராகரிக்க வேண்டும் என்றும் வழக்கறிஞர் மீனாட்சி லேகியின் வலியுறுத்தினார். ராகுல் காந்தி வருத்தம் தெரிவிப்பது வெறும் கண் துடைப்புதான் என வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி கூறினார். வருத்தம் தெரிவித்ததற்கு பதில் ராகுல் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டிருக்க வேண்டும் என நீதிபதிகள் கூறியுள்ளனர். இதனையடுத்து, ராகுல் காந்தி பிரதமர் மோடியை திருடன் என உச்சநீதிமன்றம் கூறியதாக பேசிய வழக்கில் மன்னிப்பு கோரினார். இருப்பினும், அரசியல் களத்தில் பிரதமரை திருடன் என கூறியதில் உறுதியாக உள்ளதாக ராகுல் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.