Asianet News TamilAsianet News Tamil

இந்தியாவில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சி... அனுவா டிரான்ஸ்லேஷனல் ரிசர்ச் கம்பெனியுடன் கைகோர்த்தது BMC!!

நாட்டின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றான வேதாந்தாவின் பால்கோ மெடிக்கல் சென்டர், சிங்கப்பூரின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமான அனுவா டிரான்ஸ்லேஷனல் ரிசர்ச் கம்பெனியுடன் இந்தியாவில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்காக கைகோர்த்துள்ளது.

anuva and bmc announce strategic collaboration in cancer genomics
Author
First Published Oct 6, 2022, 4:48 PM IST

நாட்டின் மிகப்பெரிய புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றான வேதாந்தாவின் பால்கோ மெடிக்கல் சென்டர், சிங்கப்பூரின் மிகப்பெரிய ஆராய்ச்சி மையமான அனுவா டிரான்ஸ்லேஷனல் ரிசர்ச் கம்பெனியுடன் இந்தியாவில் புற்றுநோய்க்கான ஆராய்ச்சிக்காக கைகோர்த்துள்ளது. இந்த இரண்டு பெரிய மருத்துவ நிறுவனங்களும் இணைந்து வருவதால், இப்போது இந்தியாவில் புற்றுநோயாளிகள் நிறைய வசதிகளைப் பெறுவார்கள், மேலும் அவர்கள் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும். இரு நிறுவனங்களும் ஜெனோமிக்ஸ் பயோபேங்க் உருவாக்கத்திற்கான பரஸ்பர ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தை அறிவித்தன. இந்த ஒப்பந்தத்தில் அனுவாவின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜொனாதன் பிக்கர் மற்றும் சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் உள்ள பால்கோ மருத்துவ மையத்தின் மருத்துவ இயக்குநர் டாக்டர் பாவ்னா சிரோஹி ஆகியோர் கையெழுத்திட்டனர். 

இதையும் படிங்க: பாரத் ஜோடோ யாத்திரையில் சோனியா காந்தி...! தாய்க்கு ஷூ லேஸ் மாட்டி விட்ட ராகுல்.. வைரலாகும் வீடியோ

இந்தியாவில் புற்றுநோய்க்கான துல்லியமான மருந்தை உருவாக்க புற்றுநோய் பயோடேட்டா வங்கியை நிறுவி பயன்படுத்துவதே இந்த இரண்டு பெரிய மருத்துவ நிறுவனங்களின் ஒன்றாக இணைந்ததன் நோக்கமாகும். இதுக்குறித்து பால்கோ மருத்துவ மையத்தின் தலைவர் ஜோதி அகர்வால் கூறுகையில், புற்றுநோய் சிகிச்சையில் இந்தியாவின் முன்னணி இடத்தை நோக்கி பால்கோ மருத்துவ மையத்தின் பயணத்தில் இது மற்றொரு மைல்கல். அனுவாவுடனான எங்கள் ஒத்துழைப்பு, துல்லியமான மருத்துவம் மற்றும் நல்ல சிகிச்சையின் மூலம் இந்திய மக்களுக்கு சிறந்த சேவை செய்ய சிறந்த அறிவு, தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சியை ஒன்றிணைக்கும். 

இதையும் படிங்க: IBPS-யின் 1,828 காலிபணியிடங்கள்.. யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்..? எப்போது தேர்வு..? விவரம் இதோ..

BMC- ன் மருத்துவ இயக்குனர் டாக்டர் பாவனா சிரோஹி கூறுகையில், இந்த கூட்டாண்மை பெஞ்ச் டு பெட் ஆராய்ச்சியை ஆதரிப்பதற்கு ஒரு பாலமாக செயல்படும், புற்றுநோய் மற்றும் புற்றுநோயாளிகளுக்கு சிகிச்சையளிப்பதில் முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கான எங்கள் முயற்சிகளுக்கு ஊக்கமளிக்கும் என்றார். அனுவா தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஜொனாதன் பிக்கர் கூறுகையில், பால்கோ மருத்துவ மையத்துடன் இந்த முயற்சியைத் தொடங்குவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எல்லா முயற்சிகளும் இருந்தபோதிலும், புற்றுநோய் இன்னும் உலகில் இறப்புக்கான மூன்றாவது முக்கிய காரணியாக உள்ளது. BMC உடன் இணைந்து, இதற்கான மிகவும் பயனுள்ள மருந்தை தயாரிப்பதில் நாங்கள் பணியாற்றுவோம் என்று தெரிவித்தார். 

Follow Us:
Download App:
  • android
  • ios