Anushka who supports the heroes



விக்ரம்

ஒவ்வொரு படத்திற்கும் உடலை வருத்தி வித்தியாசம் காட்டி நடிப்பது பெரிய விஷயம். அந்த விஷயத்தில் நடிகர்களில் முதலிடத்தில் இருப்பவர் நடிகர் விக்ரம். சேது படத்தில் மனநலம் குன்றியவராகவும், பிதாமகனில் பிணத்தை எரிக்கும் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்திருப்பார். "ஐ" படத்துக்காக உடல் எடையை 48 கிலோ வரை குறைத்தார்.இப்படி ஒவ்வொரு படத்துக்கும், வித்தியாசத்தை காட்டி சிறப்பாக நடிப்பார்.

உடலை வருத்தி நடிக்கும் அனுஷ்கா

அந்த வகையில் நடிகைகளில் குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால் முதலிடத்தில் உள்ளவர் அனுஷ்கா. அருந்ததியில் இவரின் அபார நடிப்பை பார்த்து ஆடி போனார்கள் ரசிகர்கள்.ஆண் நடிகர்களுக்கு இணையாக ஒவ்வொரு சண்டைக்காட்சியிலும் டூப் போடாமல் அற்புதமாக நடித்திருப்பார். அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதோடு மட்டுமல்லாமல் அனுஷ்காவுக்கு நல்ல பெயரையும் வாங்கித் தந்தது. அதிலிருந்து ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரமாக தேர்வு செய்து நடித்து வருகிறார் அனுஷ்கா.

சம்பள பாகுபாடு

அந்த வகையில் அனுஷ்கா நடிப்பில் இன்று வெளியான படம் பாகமதி. இந்த படத்தின் புரோமோஷனுக்காக சமீபத்தில், அவர் கேரளா சென்றிருந்தார்.அப்போது ஹீரோக்களுக்கு கொடுக்கப்படும் சம்பளம் ஹீரோயின்களுக்கு கொடுக்கப்படுவதில்லையே, இந்த பாகுபாடு ஏன்? என கேள்வி கேட்கப்பட்டது.

ஹீரோக்களுக்கு சப்போர்ட்

அதற்கு பதிலளித்த அனுஷ்கா, சம்பள விஷயத்தில் ஹீரோக்களுக்கு அதிக ஊதியம் கொடுப்பது என்பது சரியே. ஒரு படத்தில் கடுமையான உழைப்பை கொட்டி அவர்கள் நடிக்கிறார்கள். ஒரு படம் ஃபிளாப் ஆகும் போது அதற்கான கெட்ட பெயரை அவர்கள்தானே ஏற்றுக்கொள்கிறார்கள்? அந்த விஷயத்தில் நடிகைகளுக்கு பாதிப்பில்லையே என தெரிவித்துள்ளார் அனுஷ்கா.

சம்பள விஷயத்தில் பெண்ணியம் பேசும் பல நடிகைகளுக்கு மத்தியில் அனுஷ்கா இப்படி பேசியிருப்பது மற்ற நடிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.