anushka sarma virat kholi marriage arranged in italy

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும் நம்பிக்கை நட்சத்திரம் விராட் கோலிக்கும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. ஆனால் இது உண்மைதான் என்று கூறப்படுகிறது. 

அனுஷ்கா சர்மாவும், விராட் கோலியும் கடந்த 4 வருடங்களாக காதலித்து வருகின்றனர். இவர்கள் திருமணம் குறித்து அவ்வபோது செய்திகள் வெளியாகும். ஆனால், இருவரும் அதனை மறுப்பார்கள். இருப்பினும், சற்று நாட்கள் கழித்து பின்னர் இருவரும் சேர்ந்து செல்வார்கள். 

இந்நிலையில், அண்மையில் விராட் கோலிக்கும் அனுஷ்கா சர்மாவுக்கும் இத்தாலியில் திருமணம் நடக்க இருக்கிறது என செய்தி வெளியானது. ஆனால் அதனை அனுஷ்கா சர்மாவின் செய்தி தொடர்பாளர் மறுத்தார். அவர் மறுத்தாலும் விராட் கோலி - அனுஷ்கா சர்மா இடையிலான திருமணம் நடப்பது உண்மைதான் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்நிலையில், விராட் கோலியும் அனுஷ்கா சர்மாவும் திருமணம் செய்து கொள்வதற்காக ஐரோப்பாவுக்குச் சென்றுவிட்டதாக செய்தி வெளியாகியுள்ளது. அனேகமாக இருவரும் புதுவருடத்தை புது மணத் தம்பதிகளாகத் தொடங்குவார்களாம்.

விராட் கோலியும், அனுஷ்கா சர்மாவும் தங்களுடைய குடும்பத்துடன் திருமணத்திற்காக இத்தாலிக்கு சென்றுவிட்டனர். அனுஷ்காவின் குடும்பத்தார் மும்பையில் இருந்தும், விராட் குடும்பத்தார் தில்லியில் இருந்தும் இத்தாலிக்குச் சென்றுள்ளனர். 

விராட் கோலியின் திருமணம் டிசம்பர் 9, 12 அல்லது 18 ஆகிய தேதிகளில் ஒரு தேதியில் நடைபெற உள்ளது. அவர்களுடைய திருமணம் டிசம்பர் 12-ம் தேதி நடைபெற வாய்ப்பு உள்ளது என்றே தகவல்கள் வெளியாகி உள்ளது.