Asianet News TamilAsianet News Tamil

தீவிரவாத அச்சுறுத்தல்! கைகொடுத்த பாகிஸ்தான் அமைச்சர்.. எஸ்சிஓ கூட்டத்தில் ஜெய்சங்கர் செய்த மெர்சல் சம்பவம்

கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில் பயங்கரவாதம் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தடையின்றி தொடர்கிறது என்று கூறினார்.

Anti terror measures are need of the hour: Jaishankar at SCO meet
Author
First Published May 5, 2023, 3:54 PM IST

கோவாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (எஸ்சிஓ) மாநாட்டில், வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், பாகிஸ்தானை நேரடியாகக் குறிப்பிடாமல், பயங்கரவாதம் குறித்து கடுமையாக சாடியுள்ளார்.

பயங்கரவாதம் குறித்து பேசிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், எல்லை தாண்டிய பயங்கரவாதம் உள்ளிட்ட பயங்கரவாதத்தின் அச்சுறுத்தல் தடையின்றி தொடர்கிறது. பயங்கரவாத அச்சுறுத்தல் மற்றும் பயங்கரவாத நிதியுதவி நிறுத்தப்பட வேண்டும்.

Anti terror measures are need of the hour: Jaishankar at SCO meet

பயங்கரவாதத்திலிருந்து நம் கண்களை விலக்குவது நமது பாதுகாப்பு நலன்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதத்தை நியாயப்படுத்த முடியாது என்று நாங்கள் உறுதியாக நம்புகிறோம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் உட்பட அதன் அனைத்து வடிவங்களிலும் இது நிறுத்தப்பட வேண்டும்.

பயங்கரவாத நடவடிக்கைகளுக்கான நிதி வழியை வேறுபாடின்றி பறிமுதல் செய்து தடுக்க வேண்டும்” என்று எஸ்சிஓ வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்தில் ஜெய்சங்கர் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் எஸ்சிஓ தலைமையின் கீழ், 15 அமைச்சர்கள் மட்ட சந்திப்புகள் உட்பட 100க்கும் மேற்பட்ட கூட்டங்கள் மற்றும் நிகழ்வுகளை வெற்றிகரமாக முடித்துள்ளோம்” என்றார்.

இதையும் படிங்க..2 முறை கர்ப்பம்.. பேஸ்புக் காதல்! 23 வயது பெண்ணை சகோதரர் உடன் சீரழித்த போலீஸ்! அதிர்ச்சி சம்பவம்

Anti terror measures are need of the hour: Jaishankar at SCO meet

அமைதி, ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கு,” என்று ஜெய்சங்கர் கூறினார். ஜெய்சங்கரின் உரைக்குப் பிறகு, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி, பயங்கரவாத அச்சுறுத்தலை கூட்டாக ஒழிக்க வலியுறுத்தினார். "இராஜதந்திர புள்ளிகளைப் பெறுவதற்காக பயங்கரவாதத்தை ஆயுதமாக்குவதில் சிக்கிக் கொள்ள வேண்டாம்" என்று சர்தாரி கூறினார்.

ரஷ்யா, சீனா, கிர்கிஸ் குடியரசு, கஜகஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகளின் ஜனாதிபதிகளால் 2001 இல் ஷாங்காய் நகரில் நடைபெற்ற உச்சிமாநாட்டில் SCO நிறுவப்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும் 2017ல் நிரந்தர உறுப்பினர்களாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரிடம் கைகொடுக்க அதை மறுத்தார் அவர். இந்த காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க..ரூ.20000க்கு குறைவான சிறந்த டாப்-5 பட்ஜெட் ஸ்மார்ட்போன்கள் பட்டியல் இதோ

Follow Us:
Download App:
  • android
  • ios