ஆந்திராவில் லாரி - டெம்போ வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்  5 குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 

ஆந்திராவில் லாரி - டெம்போ வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் சித்தூரை சேர்ந்த 18 பேர் டெம்போ வேனில் ஒன்றில் அஜ்மீர் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது மாதாபுரம் அருகே சென்றுக்கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக லாரி மீது டெம்போ வேன் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் டெம்போ வேனில் பயணம் செய்த 5 குழந்தைகள் உட்பட 14 பேர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 4 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்து தொடர்பாக உடனே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 2 வாகனங்களுக்கு இடையே சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை கிரேன் உதவியுடன் மீட்டனர். பின்னர், படுகாயமடைந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் டெம்போ வேன் ஓட்டுநர் தூக்க கலக்கத்தால் விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.