வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை: தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்ட கவுன்சிலர்!

வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத விரக்தியில் ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் கவுன்சிலர் ஒருவர் தன்னை தானெ செருப்பால் அடித்துக் கொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது

Andhra Pradesh councillor hits self with slippers

ஆந்திர மாநிலம் அனகாபள்ளி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத விரக்தியில் கவுன்சிலர் ஒருவர் தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டார். கவுன்சிலர் தன்னை அடித்துக் கொண்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகளின் அலட்சியத்தால் வாக்காளர்களுக்கு தான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாமல் போனதாக குற்றம் சாட்டியுள்ள நரசிப்பட்டினம் நகராட்சியின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த கவுன்சிலர் முலபார்த்தி ராமராஜு (40), நகர சபைக் கூட்டத்தின்போது தன்னைத்தானே செருப்பால் அடித்துக் கொண்டார். பின்னர், பின்னர் கூட்டத்தில் இருந்து அழுதுகொண்டே அவர் வெளியேறினார்.

மகாராஷ்டிராவில் ராட்சத கிரேன் விபத்து: 15 பேர் பலி!

இதுகுறித்து அவர் கூறுகையில், நான் கவுன்சிலராக தேர்ந்தெடுக்கப்பட்டு 31 மாதங்கள் ஆகியும், எனது வார்டில் வடிகால், மின்சாரம், சுகாதாரம், சாலைகள் மற்றும் பிற பிரச்சினைகளை தீர்க்க முடியவில்லை என கூறியுள்ளார். அதிகாரிகளின் அலட்சியத்தால் வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் மக்கள் தன்னை கேள்வி கேட்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

முலபார்த்தி ராமராஜு அழுவதையும், செருப்பால் தன்னைத்தானே அடித்துக் கொள்வதையும் தெலுங்கு தேசம் கட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளது. மேலும், “தெலுங்கு தேசம் கட்சி சார்பில் வெற்றி பெற்ற லிங்கபுரம் கிராமத்தின் பழங்குடியின பிரதிநிதி முலபர்த்தி ராமராஜு, 30 மாதங்களாக பதவியில் இருந்தும் அந்த கிராமத்தில் ஒரு குழாய் கூட அமைக்க முடியவில்லை.” எனவும் அக்கட்சி பதிவிட்டுள்ளது.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios