ஆந்திராவில் நின்றிக்கொண்டிருந்த லாரி மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் அச்சம்பட்டு அருகில் உள்ள ருத்ரவரம் கிராமத்தைச் சேர்ந்த சத்திய நாராயண ரெட்டி, அவரது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்துவிட்டு ஊர் திரும்பிக்கொண்டிருந்தனர். காரை பிரேம் ராஜூ(35) என்பவர் ஓட்டினார். ரேணிகுண்டா புறநகர் பகுதியான துரவராஜூபள்ளே என்ற கிராமத்தின் அருகே கார் சென்றுக்கொண்டிருந்த போது சாலையில் நின்ற லாரி மீது திடீரென பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த விஜய பாரதி(38), பிரசன்னா(14), சென்ன கேசவ ரெட்டி(12), ஓட்டுநர் பிரேம் ராஜூ(35) உள்ளிட்ட 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் விபத்தில் படுகாயம் அடைந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சம்பவ இடத்திற்கு விரைந்த இறந்தவர்கள் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஓட்டுநர் தூக்கத்தின் காரணமாக விபத்தில் நிகழ்த்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது