An overview of GST
இன்று நள்ளிரவு ஜிஎஸ்டி மசோதா அறிமுக நிகழ்ச்சி டெல்லி, நாடாளுமன்றத்தில் நடக்கிறது. இதில் மத்திய அமைச்சர்கள், பல்வேறு மாநில முதல்வர்கள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள், பிரபல தொழிலதிபர்கள், சினிமா நட்சத்திரங்கள் பங்கேற்கின்றனர்.
செயல்பட்டுக்கு வரும் ஜிஎஸ்டி செயல்பாடுகள் குறித்த கண்ணோட்டத்தை பார்ப்போம்.
கார்களுக்கு உச்சபட்ச ஜிஎஸ்டியான 28 சதவீதம் மற்றும் செஸ் வரியாக கார்களுக்கு ஏற்ப 1 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது.
28 சதவீத ஜிஎஸ்டியுடன் 1,200 சிசிக்கும் குறைவான சிறிய ரக பெட்ரோல் கார்களுக்கு 1 சதவீத செஸ், 1,500 சிசிக்கு குறைவான டீசல் கார்களுக்கு 3 சதவீத செஸ், 1,500 சிசிக்கு மேல் உள்ள கார்கள் மற்றும் 4 மீட்டர் நீளத்துக்கு மேல் உள்ள எஸ்யுவி கார்களுக்கு 15 சதவீத செஸ் விதிக்கப்பட்டுள்ளது.
‘ஜிஎஸ்டிக்கு பிறகு சிறிய ரக கார்கள் விலை சிறிதளவு உயரலாம். சொகுசு கார்கள் விலை குறையும் என ஆட்டோமொபைல் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
ஏசி, பிரிட்ஜ்: வீட்டு உபயோகப் பொருட்கள் பட்டியலில் வரும் ஏசி, பிரிட்ஜ் ஆகியவை 28 சதவீத வரி விகித பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் இனி இவற்றின் விலை சற்று குறையக்கூடும். ஏனெனில், தற்போது இவற்றுக்கு 30 முதல் 31 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது.
போக்குவரத்து சேவைகளுக்கான வரி விகிதம் 5 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது ஓலா, உபேர் உள்ளிட்ட கேப்ஸ் நிறுவனங்கள் 6 சதவீதம் வரை வரி வசூலிக்கின்றன. ஜிஎஸ்டி அமலாகும்போது கட்டணத்தில் சற்றே குறைய வாய்ப்புள்ளது.
போக்கு வரியானது ஜிஎஸ்டியில் சேவை வரியுடன் இணைக்கப்பட்டுள்ளது. ₹100க்கு அதிகமான சினிமா டிக்கெட்களுக்கு 28 சதவீதம் வரி, அதற்கு குறைவான டிக்கெட்களுக்கு 18 சதவீத வரி நிர்ணயிக்கப்பட்டது.
பொருட்கள் வரி
ரூ.500க்கு குறைவான காலணி 5%
ரூ.500க்கு மேற்பட்ட காலணி 18%
ரெடிமேட் ஆடைகள் 12%
ரூ.1000க்கு குறைவான ஆடைகள் 5%
பருத்தி நூல், ஆடைகள் 5%
பீடி 28%
தங்கம் 3%
வைரம் 3%
பட்டை தீட்டப்படாத வைரம் 0.25%
பிஸ்கட் 18%
கைத்தறி நூல் 5%
செயற்கை நூல் 18%
வேளாண் இயந்திரங்கள் 5%
ஹேர் ஆயில், பற்பசை, சோப் 18%
ஏசி, பிரிட்ஜ் 28%
சிறிய கார்கள் 28%
குலாப் ஜாமுன், ரசகுல்லா,
சமையல் எண்ணெய், சர்க்கரை, டீ,
காபி, நிலக்கரி 5%
சேவைகளுக்கான வரிகள்
1. தொலைத்தொடர்பு மற்றும் நிதித்துறை 18%
2. போக்குவரத்து 5%
3. ஏசி ரயில் பயணம் 5%
4. ரூ.1000 முதல் ரூ.2000 ஆயிரம் வரையிலான நாள் வாடகையுள்ள லாட்ஜ்கள் மற்றும் விடுதிகள் 12%
5. ரூ.2,500 முதல் ரூ.5000 வரையிலான நாள் வாடகையுள்ள லாட்ஜ்கள் மற்றும் விடுதிகள் 18%
6. ரூ.5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாடகையுள்ள லாட்ஜ்கள் மற்றும் விடுதிகள் 28%.
7. சினிமா, சூதாட்டம், பந்தயம் 28%
8.பிளாஸ்டிக் தார்பாலின் 18%
9.ஸ்கூல் பேக் 18%
10.கான்கிரீட் பைப்புகள் 18%
