Asianet News TamilAsianet News Tamil

பாகிஸ்தான் நாசகார சதியால் காஷ்மீரில் பயங்கர பரபரப்பு... வெடி பொருள்- பயங்கர ஆயுதங்களுடன் லாரி பறிமுதல்..!

ஜம்மு -காஷ்மீர் கத்வா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் சென்ற லாரி ஒன்று பரிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 

Ammunition - Large seized truck with heavy weapons ... in Kashmir
Author
Kashmir, First Published Sep 12, 2019, 12:08 PM IST

ஜம்மு -காஷ்மீர் கத்வா பகுதியில் ஆயுதங்கள் மற்றும் வெடி பொருட்களுடன் சென்ற லாரி ஒன்று பரிமுதல் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

 Ammunition - Large seized truck with heavy weapons ... in Kashmir

காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லைப்பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்நிலையில் அங்குள்ள கத்வா பகுதியில் பயங்கர ஆயுதங்கள் வெடி பொருட்களை ஏற்றிச் சென்ற லாரி சோதனையில் போது சிக்கியது. பறிமுதல் செய்யப்பட்ட அந்த லாரி குறித்தும், ஏற்றி வந்தவர்கள் குறித்தும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. Ammunition - Large seized truck with heavy weapons ... in Kashmir
 
காஷ்மீரில் மாநில அந்தஸ்தையே மத்திய அரசு முடக்கி விட்டதால், பிரிவினைவாதிகளின் நிலை பரிதாபத்துக்குரியதாக மாறியுள்ளது. பயங்கரவாதிகள் அங்கு தொடர்ந்து உரிமை கொண்டாட முடியாத நிலையை மத்திய அரசு உருவாக்கி உள்ளது. இதனால் காஷ்மீர் பிரச்சினையை வைத்து குளிர்காய்ந்து வந்த பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் கடும் ஆத்திரம் அடைந்துள்ளனர். காஷ்மீருக்குள் அதிகமாக ஊடுருவி தாக்குதல் சம்பவங்களை நடத்த தீவிரமாக உள்ளனர். 

கிஸ்தானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சமீப காலமாக அதிக அளவில் காஷ்மீருக்குள் ஊடுருவி வருவதாக உளவுத்துறை எச்சரித்துள்ளது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு பயங்கரவாதிகள் ஊடுருவல் அதிகரித்து விட்டதாக தெரிய வந்துள்ளது.

ஆகஸ்டு 5-ந்தேதிக்கு பிறகு மட்டும் இதுவரை சுமார் 50 பயங்கரவாதிகள் காஷ்மீருக்குள் ஊடுருவி வந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானவர்கள் லஷ்கர்- இ-தொய்பா, ஜெய்ஷ்- இ-முகமது பயங்கரவாத இயக்கங்களின் தற்கொலைப்படை பிரிவைச் சேர்ந்தவர்கள். எனவே தற்கொலை தாக்குதலுக்கு திட்டமிட்டு அவர்கள் ஊடுருவி இருக்கலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.Ammunition - Large seized truck with heavy weapons ... in Kashmir

இந்த நிலையில் காஷ்மீருக்குள் ஊடுருவும் வகையில் சர்வதேச எல்லை பகுதிகளில் சுமார் 200 பயங்கரவாதிகள் தயார் நிலையில் காத்திருப்பது தெரிய வந்துள்ளது. இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து பாலகோட் பயங்கரவாத முகாமை குண்டுகள் வீசி அழித்த பிறகு எல்லையில் பயங்கரவாதிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தது.

தற்போது எல்லையில் அதிக அளவு பயங்கரவாதிகள் காணப்படுகிறார்கள். பாகிஸ்தான் சிறையில் இருந்து சமீபத்தில் பயங்கரவாதி மசூத் அசார் ரகசியமாக விடுவிக்கப்பட்டான். அவன் எல்லை பகுதிக்கு கொண்டு வரப்பட்டுள்ளான். அவனது உத்தரவின் பேரில் பயங்கரவாதிகளை அதிக அளவில் காஷ்மீருக்குள் அனுப்பும் முயற்சிகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது.
 

Follow Us:
Download App:
  • android
  • ios