அம்மா அறக்கட்டளை மற்றும் சாதனை IAS அகாடமி சார்பில் உப்பளம் அதிமுக தலைமை அலுவலகத்தில் இலவச LDC/UDC, PC /home guard ஆகிய போட்டி தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகளை அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் துவக்கி வைத்தார். 

அம்மா அறக்கட்டளை மற்றும் சாதனை IAS அகாடமி சார்பில் புதுச்சேரி அரசில் நடைபெறவுள்ள LDC/UDC, PC /home guard ஆகிய பணியங்களுக்கான போட்டி தேர்வுகளுக்கு கோச்சிங் சென்டர்களுக்கு சென்று பயிற்சி பெற முடியாத ஏழை இளைஞர்கள் பயன் பெரும் வகையில் அனுபவமிக்க ஆசிரியர்களை கொண்டு இலவச பயிற்சி வகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டள்ளது. 

புதுவை கிரண்பேடி ஸ்டைலை கையில் எடுக்கும் தமிழிசை; ஆளும் கட்சி கலக்கம்

இதன் தொடக்க விழா இன்று காலை நடைபெற்றது. இதில் புதுச்சேரி கிழக்கு மாநில அதிமுக செயலாளரும்,முன்னாள் சட்டமன்ற கட்சி தலைவருமான அன்பழகன் கலந்துகொண்டு இலவச பயிற்சி வகுப்பினை இன்று தொடங்கி வைத்தார். இந்த பயிற்சி வகுப்புக்கான ஏற்பாடுகளை அம்மா அறக்கட்டளை நிறுவனத் தலைவர் டாக்டர் பிரபாகரன் செய்திருந்தார்.

கணவன் செல்போன் வாங்கி தராததால் மனைவி தூக்கிட்டு தற்கொலை

இந்த பயிற்சி வகுப்பு இன்று முதல் வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுகிழமை ஆகிய நாட்களில் காலை 10 மணி முதல் மதியம் 1.00 .மணி வரை உப்பளம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் மாநிலக் கழக அவைத் தலைவர் அன்பானந்தம், மாநில கழகப் பொருளாளர் ரவி பாண்டுரங்கன், மாநில கழக துணைச் செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, காந்தி, மாநில மீனவரணி செயலாளர் ஞானவேல், உப்பளம் தொகுதி அவைத்தலைவர் சவுரிநாதன், வார்டு கழக செயலாளர் செல்வம் மற்றும் இளங்கோ, சசி, விக்னேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.