பாஜக தலைவர் அமித்ஷாவின் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கு மேற்குவங்க அரசு அனுமதி மறுத்துள்ளது. இதனால் மம்தா அரசுக்கும் பாஜகவுக்கும் இடையேயான அரசியல் மோதல் உச்சக்கட்டத்தில் எட்டியுள்ளது. 

சமீபத்தில் மேற்கு வங்கத்தில் மாநில அரசு அனுமதி இல்லாமல் சிபிஐ உள்ளே நுழையக்கூடாது என்று மம்தா கூறியிருந்தார். அதேபோல் பா.ஜ.க. ரத யாத்திரை நடத்தவும், பொதுக்கூட்டங்கள் நடத்தவும் மேற்குவங்க அரசு அனுமதி மறுத்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பா.ஜ.க. சில நிபந்தனைகளுடன் அனுமதி பெற்றனர். ஆனாலும் மம்தா அரசின் கெடுபிடி தொடர்ந்ததால், ரத யாத்திரையை தள்ளி வைத்தனர். ரதயாத்திரையை நடத்தியது. இந்த விவகாரம் தொடர்பான பதற்றம் தணிவதற்குள் அடுத்த பிரச்சனையை மம்தா பானர்ஜி தொடங்கி உள்ளார். 

பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேசியத் தலைவர் அமித் ஷா உடல்நலம் தேறியதையடுத்து நாளை மேற்கு வங்கத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க உள்ளார். ஆனாலும் அவரது ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

 மல்டா விமான நிலையத்தில் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்காலிக ஹெலிபேடும் தயார் நிலையில் இல்லை. ஆகவே, ஹெலிகாப்டரை தரையிறக்க அனுமதிக்க முடியாது என கூறப்பட்டுள்ளது. இதனால் கடும் கோபமடைந்த பாஜக நிர்வாகிகள் அரசு அதிகாரத்தை முதல்வர் மம்தா தவறாக பயன்படுத்துகிறார் என குற்றம்சாட்டியுள்ளனர்.