இந்தியாவில் இன்று தசரா திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அமிர்தரசில் பகுதியில் தசரா விழா கொண்டாடப்பட்டது.

அமிர்தசரஸ் அருகே உள்ள ஜோடாபதக் என்னுமிடத்தில்  இன்று மிகப் பிரமாண்டமாக தசரா விழா கொண்டாடப்பட்டு வந்தது. ரயில் தண்டவாளம் அருகே, விழாவில் கலந்து கொண்ட நூற்றுக்கணக்கான மக்கள் குவிந்திருந்தனர். அப்போது  பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வந்த நிலையில், அதிலிருந்து தப்பிப்பதற்காக ரயில் பாதை அருகே பொது மக்கள் ஒடினர் ,

அப்போது அவ்வழியே வந்த எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று பொது மக்களின்  மீது மோதியது. இச்சம்பவத்தில் 100பேர் வரை பலியாகி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. முதற்கட்டமாக 50 வரை என பலியாகியுள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் பலர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்து நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.